பழங்களில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. பழங்களை சாப்பிட்டு வந்தால் நாம் ஏராளமான நன்மைகளை நம்மால் பெற முடியும். புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
இருப்பினும் இந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது நமக்கு தீங்கை விளைவிக்கும் என கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த பழங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்து காணப்படுவது டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு நல்லது அல்ல.
அதிகமாக பழங்களை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்:
அதிகப்படியான பிரக்டோஸ் லிபோஜெனெசிஸ் எனப்படும் செயல்பாட்டில் கல்லீரலால் கொழுப்பாக மாற்றப்படுகிறது. கொழுப்பு மூலக்கூறுகள் கல்லீரலில் குவிந்து மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழி வகுக்கிறது.
உலகளாவிய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் மற்றும் இந்தியர்களில் 9-32 சதவிகிதம் கல்லீரலை பாதிக்கும் பொதுவான நோயாக உள்ளது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய்க்கு முக்கிய காரணியாக பிரக்டோஸ் அமைந்துள்ளது.
இதில் 49 நோயாளிகளின் உணவு வரலாற்றை பார்க்கும் போது பாதிக்கப்பட்ட நபர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக உணவு பிரக்டோஸை உட்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. லிபோஜெனெசிஸ் தவிர அதிகப்படியான பிரக்டோஸ் நுகர்வு கல்லீரல் வீக்கம், கல்லீரல் செல்களுக்கு பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறடதாக கூறப்படுகின்றது.
மூளை மற்றும் நரம்பு பிரச்சினை:
மூளை ஆரோக்கியத்தில் பிரக்டோஸின் தாக்கம் இன்று வரை குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகள் படி குறுகிய கால பிரக்டோஸ் நுகர்வு மூளை ஆரோக்கியத்தை பாதித்து நரம்பு அழற்சி, மூளை மைட்டோகாண்ட்ரியல் செயலிழப்பு, ஆக்ஸினேற்ற அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
2021 மதிப்பாய்வின் படி பிரக்டோஸின் அதிகப்படியான நுகர்வு மூளை செயல்பாட்டை பெருமளவு பாதிக்கும். இதனால் பல நரம்பியல் கோளாறு வளர்ச்சியை பாதிக்கிறது. பிரக்டோஸ் நூற்றுக்கணக்கான மூளை மரபணுக்களை சேதப்படுத்தக் கூடியது.
நீரிழிவு நோய், இதய நோய் மட்டுமல்லாமல் அல்சைமர் நோய், கவனக்குறைவு, ஹைபராக்டிவிட்டி கோளாறு போன்ற பல நோய்களுக்கு வழி வகுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன்:
அதிக பிரக்டோஸ் நுகர்வு இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும். அதிகப்படியான பிரக்டோஸ் நுகர்வு கொழுப்பு குவிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை ஆகியவற்றால் பாதிப்படைகிறது. 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட விலங்கு ஆய்வில் இரண்டு மாத பிரக்டோஸ் சப்ளிமெண்ட்ஸ் கல்லீரலில் ட்ரைகிளிசரைடான கெட்ட கொழுப்பு குவிவதை உறுதிப்படுத்தி உள்ளது.
7-நாள் மேற்கொண்ட அதிக பிரக்டோஸ் டயட் மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (VLDL) ட்ரைகிளிசரைடுகளின் குவிப்புக்கு வழிவகுத்துள்ளது. இதன்படி 2009 ஆய்வின் படி இருதய நோய் ஆபத்து வருவது தெரிய வந்துள்ளது.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர பிரக்டோஸ் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை உயர்த்துகிறது. இது கீல்வாதத்திற்கு வழி வகுக்கும். இது இரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைடான கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.
செரிமான கோளாறுகள் :
அதிகப்படியான பிரக்டோஸ் வயிற்றுப்போக்கு மற்றும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி போன்றவற்றை ஏற்படுத்தலாம். எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி ஆனது வயிற்று வலி, வீக்கம், அஜீரணம், மலச்சிக்கல் மற்றும்/அல்லது வயிற்றுப்போக்குடன் கூடிய செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.
நிறைய பேருக்கு முறையற்ற செரிமானம் ஏற்படலாம். பிரக்டோஸை உறிஞ்சுவது வயிற்றுப்போக்கு, வாய்வு மற்றும் ஏப்பம் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. குறைந்த பிரக்டோஸ் உணவை உட்கொண்ட பிறகு எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி 68 நோயாளிகளில் கணிசமாக மேம்பட்டு இருப்பதாக 2013 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளது.
எந்தளவு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?
முழு பழங்களாக எடுத்துக் கொள்ளும் போது அதில் அதிகளவு நீர்ச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரக்கூடும். இதன் மூலம் அதிகப்படியான பழங்களை சாப்பிடுவதை தவிருங்கள்.
10 அமெரிக்கர்களில் ஒருவர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவில் பழங்களை எடுத்துக் கொள்கிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு நாளைக்கு 3.5 பரிமாறும் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஒரு நாளைக்கு 5 பரிமாறும் அளவு அல்லது 400 கிராம் வரை பழங்களை எடுத்துக் கொள்வது போதுமானது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கார்போ ஹைட்ரேட் சில ஆய்வுகள் 10-17 நபர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு 20 பரிமாண பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல விளைவுகளை மதிப்பீடு செய்தன மற்றும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதையும் காட்டியது. குறைந்த கார்போஹைட்ரேட் உணவு ஒரு நாளைக்கு 100-150 கிராம் கார்போஹைட்ரேட் அளவை பரிந்துரைக்கிறது.
அல்ட்ரா-லோ-கார்ப் டயட்கள் அல்லது கீட்டோஜெனிக் டயட் ஒரு நாளைக்கு 50 கிராமுக்கு குறைவான கார்போஹைட்ரேட்டுகளை பரிந்துரைக்கின்றன. ஏனெனில் பழங்களில் ஒரு துண்டுக்கு 15-30 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.கிளைசெமிக் குறியீடு நீரிழிவு நோயாளிக்கு கிளைசெமிக் குறியீடு அடிப்படையில் பழங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
70 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஜிஐ கொண்ட பழங்கள் சர்க்கரையை மிக அதிகமாகக் கொண்டுள்ளன. எனவே நடுத்தர கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களான 56-69 வரை கொண்ட பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கான பழங்களின் பட்டியல் :
தர்பூசணி, பேரீச்சம் பழம், அன்னாசி பழம், பழுத்த வாழைப் பழம், திராட்சை, மாதுளை பழம், பப்பாளி, கஸ்தூரி பழங்கள் உயர் மற்றும் நடுத்தர கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு பழங்கள் :
செர்ரி, ஆப்பிள், திராட்சை, அவகேடா, ஆரஞ்சு, பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, பேரிக்காய், கொய்யாப்பழம் எனவே பழங்கள் நமக்கு பலவித நன்மைகளை தந்தாலும் நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட அளவு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.