25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mango facepack 16
முகப் பராமரிப்பு

முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லணுமா?இதை முயன்று பாருங்கள்

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம், அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களுள் ஒன்றாகும். அதுவும் தற்போது மாம்பழ சீசன். எங்கும் மாம்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அப்படி விலைக் குறைவில் மாம்பழங்கள் விற்கப்படும் போது, அதை நிச்சயம் நாம் வாங்குவோம். நீங்கள் மாம்பழ பிரியராக இருந்தால், நிச்சயம் மாம்பழம் உங்கள் அழகை மேம்படுத்த எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாம்பழங்களை சாப்பிடுவதால், அது எப்படி உடலுக்கு எண்ணற்ற ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளை வழங்குகிறதோ, அதைப் போல் சருமத்திற்கு பயன்படுத்தும் போதும் வழங்குகிறது.

உங்களுக்கு முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனைகள் அதிகம் இருந்தால், மாம்பழங்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுங்கள். அதுவும் மாம்பழங்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடுங்கள். கீழே சரும பிரச்சனைகளைப் போக்க மாம்பழங்களைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

முகப்பருவைப் போக்கும் மாம்பழம் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் ஏ சருமத்தில் ஏற்படும் முகப்பரு பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். அதுவும், இதை மருத்துவ குணம் நிறைந்த தேனுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

மாஸ்க் செய்முறை:

தேவையான பொருட்கள்:

* மாம்பழக் கூழ் – 4 டேபிள் ஸ்பூன்

* தேன் – 2 டீஸ்பூன்

* பாதாம் எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மாம்பழக் கூழ், மஞ்சள் தூள், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கரும்புள்ளியைப் போக்கும் மாம்பழம் மற்றும் அரிசி மாவு ஃபேஸ் மாஸ்க்
கரும்புள்ளியைப் போக்கும் மாம்பழம் மற்றும் அரிசி மாவு ஃபேஸ் மாஸ்க்
மாம்பழத்தில் அழகு சாதனப் பொருட்களில் இருக்கும் ஆல்பா-ஹைட்ராக்சி அமிலம் உள்ளது. ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் நிறைந்த மாம்பழத்தை அரிசி மாவிடன் சேர்த்து சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, அது சருமத்துளைகளின் ஆழ் பகுதியில் உள்ள அழுக்கை வெளியேற்றவும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை உடைத்து நீக்கவும் உதவுகிறது.

மாஸ்க் செய்முறை:

தேவையான பொருட்கள்:

* மாம்பழக் கூழ் – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டீஸ்பூன்

* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* பால் – 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மாம்பழக் கூழ், தேன், அரிசி மாவு மற்றும் பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை சருமத்திற்கான மாம்பழம் மற்றும் களிமண் மாஸ்க்

உங்கள் முகம் பொலிவிழந்து, எண்ணெய் வழிந்து காணப்படுகிறதா? உங்களுக்கு முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமா? அப்படியானால் மாம்பழத்தை முல்தானி மெட்டியுடன் சேர்த்து பயன்படுத்துங்கள். இது சருமத்தில் சுரக்கும் எண்ணெயைக் கட்டுப்படுத்த உதவி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

மாஸ்க் செய்முறை:

தேவையான பொருட்கள்:

* மாம்பழ கூழ் – 2 டேபிள் ஸ்பூன்

* முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

* பால் – 1/4 கப்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மாம்பழக் கூழ், முல்தானி மெட்டி, தயிர் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நன்கு கழுவி உலர்த்தி, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை தடவி, 20 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள் .

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகப்பருக்கள் ஏன் வருகிறது என்று தெரியுமா?

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள்

nathan

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan

முகப்பரு தொலையினால் அவஸ்தைப்படுகிறீர்காளா? இனி தொல்லையே இல்லை!

nathan

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

nathan

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்ய…

sangika