ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது என்பது அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமின்றி உடன் வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும்.
அந்த சந்தோஷத்தில் சிலர் கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் சில எடக்குமடக்கான கேள்விகளை கேட்டு மாட்டிக்கொள்வார்கள். அந்த வகையில் கர்ப்பிணி பெண்களிடம் மறந்தும் கேட்க கூடாத சில கேள்விகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை உங்களது நண்பர்கள், உறவினர்கள், ஏன் உடன் பணிபுரிபவர்களிடம் கூட ஷேர் செய்யுங்கள்!
#1
“ஏய் நீ ரொம்ப ஸ்லிம்மா இருக்க” – நீங்கள் அவரை பாராட்டும் வார்த்தை என நினைத்து இதை அவரிடம் கூறுவீர்கள். ஆனால் அவர் இதனை குழந்தை சரியாக வளரவில்லையோ, அல்லது ஆரோக்கியமாக இல்லையோ என நினைத்து பயந்துவிடுவார்.
#2
“வாவ் நீ ரொம்ப குண்டாகிட்ட”- சரி ஸ்லிம்மா இருக்கனு சொன்ன தான பிரச்சனை என்று நினைத்து, நீங்கள் அவரிடம் நீ ரொம்ப குண்டாகிட்டனு சொன்னா, அவர் தனது அழகு குறைந்துவிட்டதாக நினைக்கக்கூடும். கர்ப்பமாக இருந்தால் உடல் எடை அதிகரிப்பது சாதரணம் தானே! எனவே நீங்கள் அவரிடம் இதைப்பற்றி எல்லாம் பேசாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.
#3
“பையன் பிறக்கும்னு நினைக்கிறாயா அல்லது பெண் பிறக்கும் என நினைக்கிறாயா? ” – இந்த கேள்வியை கர்ப்பிணி பெண்களிடம் பெரும்பாலனோர் கேட்பது உண்டு. இதில் என்ன தவறு இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் தவறு தான். அவருக்கு தேவை குழந்தை தான். அது ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?
#4
“நிஜமாவே நீ பத்துமாத கர்ப்பிணியா” – நீங்கள் ஏதோ ஆச்சரியத்தில் கேட்கும் இந்த கேள்வி அந்த கர்ப்பிணியின் மனதை காயப்படுத்துவதாக அமையும்.
#5
“நான் கர்ப்பமாக இருக்கும் போது…..” – என ஆரம்பித்து உங்களுக்கு ஏற்பட்ட எதிர்மறையான அனுபவங்களை எல்லாம் அவருக்கு கூறாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகள் நடந்திருக்கும். அதை எல்லாம் கூறி அவரை பயமுறுத்த வேண்டாம்.
#6
” யானை எல்லாம் 22 மாதம் கர்ப்பாக இருக்குமாம்.. நமக்கென்ன 10 மாதம் தானே?” – இது போன்ற எரிச்சலூட்டும் விஷயங்களை எல்லாம் வலியால் தவிக்கும் ஒரு கர்ப்பிணியிடம் கூறி வாங்கிக்கட்டிக்கொள்ளாதீர்கள்!
#7
“இப்போவே தூங்கிக்கோ இனி மேல் தூங்க முடியாது” – இது போன்ற வார்த்தைகளை விளையாட்டாக சொல்கிறீர்களோ அல்லது உணர்ந்து சொல்கிறீர்களோ… ஆனால் இந்த வார்த்தைகள் அவரது மனதை காயப்படுத்தும்.
#8
“என்னோட பிரசவம் ரொம்ப பிரச்சனையா இருந்துச்சு, நீயாவது நல்லபடியா குழந்தை பெற்றுக்கொள்” – எந்த ஒரு பெண்ணுக்கும் பிரசவம் பற்றிய பயம் மனதில் இருக்க தான் செய்யும்..! இப்போது நீங்கள் உங்களது பிரசவ சிக்கல்கள் பற்றி கூறி அவரது பயத்தை அதிகப்படுத்துவது அவசியம் தானா?
#9
“நீ ஏன் இந்த சின்ன / வயசான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்கிறாய்?” – இந்த கேள்விக்கு உங்களுக்கு கட்டாயம் பதில் தெரிந்துகொள்ள வேண்டுமா? எதற்காக கர்ப்பமான பெண்ணிடம் இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும்? அவருக்கு தேவையான வயதில் அவர் குழந்தை பெற்றுக்கொள்கிறார். அதனால் நமக்கு என்னவாகிவிட போகிறது.