31.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
unt5ttitled
அசைவ வகைகள்

இறால் சாதம்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 500 கிராம்
சுத்தம் செய்த இறால் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 4
ப்ளம்ஸ் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 7
நெய் – 50 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

அரிசியை நன்றாகக் கழுவி நீரை வடித்துக் வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு சூடானதும் வெங்காயம், மிளகாயைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் அரிசி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அரிசியின் அளவிற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மூடி விடவும். சாதம் வெந்ததும் இறக்கவும்.

சுவையான இறால் சாதம் தயார்.
unt5ttitled

Related posts

தம் பிரியாணி சமைப்பது எப்படி ?

nathan

சுவையான மங்களூர் முட்டை குழம்பு

nathan

வான்கோழி குழம்பு

nathan

ஜலதோஷத்தை விரட்டும் பெப்பர் சிக்கன்

nathan

முட்டை புளி குழம்பு

nathan

இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika

முட்டை குழம்பு

nathan