குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் கண்டித்து அவர்களே அதே தவறை செய்யும் போது அவர்கள் மனதில் பல பின்பங்களை உண்டாக்கும். குழந்தைகளிடம் பழகும் போது பெற்றோர்கள் உங்கள் தப்பை ஒப்புக்கொள்வதினால், உங்களுடைய மதிப்பு மரியாதை உங்கள் மீதான மதிப்பு உயரவே செய்யும். உங்களின் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
மேலும், நீங்கள் பேசும் வார்த்தைகள், பின்பற்றும் பழக்க வழக்கங்கள் அவர்கள் பின்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகள் முன்பு தவறுகளை செய்ய நேர்ந்திருந்தாலும், அதனை மனதார ஒப்புக்கொள்ளுங்கள்.
தேவையில்லாமல், பொறுமை இழந்து செய்து விட்டதாக கூறுங்கள். அந்த இடத்தில் சரியான நிலையில் தாங்கள் இல்லை என்பதை எடுத்துக் கூறி மன்னிப்புக்கேளுங்கள்.
அதன்பின் நீங்கள் செய்த தவறால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் எண்ணங்களுக்கு, உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து பொறுமையாக கேளுங்கள்.
முக்கியமாக முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு, பிறகு அவர்களின் செயல்களை குறை சொல்ல வேண்டாம். அவர்கள் உங்கள் பிள்ளைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிடுங்கள்.
ஒருவேளை நீங்கள் குற்றம் சொன்னால், அதனை அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தைகளிடம் பழகும் போது முடிந்த வரை அவர்களிடம் அன்பாக பேசுங்கள்.