தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – 1/2kg
இஞ்சி பூண்டு விழுது -1tsp
பச்சை மிளகாய் -2
கரம் மசாலா -1/4 tsp
உருளைக்கிழங்கு 100g
கஜு
சோள மா -25g
எண்ணெய் -200g
கொத்தமல்லி
உப்பு
செய்முறை
சிக்கனை சுத்தப்படுத்தி நீரில் நன்கு கொதிக்க வைக்கவும் . பின் உருளைக்கிழங்கு தோல் நீக்கி மசித்து கொள்ளவும் . வெந்த சிக்கனை கைகளால் பிசைந்து உதிர்த்து கொள்ளவும் . அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு ,இஞ்சி பூண்டு விழுது ,அரைத்த பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,உப்பு மற்றும் கொத்தமல்லி இட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும் .
பின்பு அதனை வட்டமாக தட்டி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும் .
சுவையான ஈசியான சிக்கன் கட்லட் தயார் .