26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
ht2590
மருத்துவ குறிப்பு

மகப்பேறு மருத்துவர் செக்கப்பில் என்ன செய்வார்?

முதல் விசிட் !

நீங்கள் முதன் முறையாக மகப்பேறு மருத்துவரை சந்திக்கும்போது, அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார். இதன் மூலம் நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அறிகுறி தெரிகிறதா என்று கன்ஃபார்ம் செய்து கொள்வார். தவிர உங்களுடைய ஃபேமிலி மெடிக்கல் ஹிஸ்ட்ரியைப் பற்றியும் டாக்டர் விசாரிப்பார். இதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது ஏதாவது காம்ப்ளிகேஷன் வர வாய்ப்புள்ளதா என்று டாக்டர் தெரிந்துக்கொள்வார். நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாகி இருந்தால், அந்த டெலிவரி நார்மலா அல்லது சிசேரியனா என்று விசாரிப்பார். அதன் பிறகு உங்கள் கருப்பையின் அளவை பரிசோதனை செய்து நீங்கள் கர்ப்பமடைந்து எவ்வளவு நாள் ஆகியுள்ளது என்று சொல்லுவார்.

கருப்பையின் அளவை பரிசோதித்தல்!

கர்ப்பம் அடைந்த புதிதில் நீங்கள் மருத்துவரை சந்திக்கும் முதல் விசிட்டின்போது உள் பரிசோதனையின் மூலம் (internal Examination) கருப்பையின் அளவைதான் மருத்துவர் சோதிப்பார். கர்ப்பம் தரித்து 3 மாதம் ஆன பிறகு சாதாரணமாக வயிற்றின்மேலே மட்டும்தான் பரிசோதனை செய்வார்கள். ஏனென்றால் கர்ப்பமான மூன்று மாதம் கழித்து சாதாரணமாக அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாலே கர்ப்பம் தெரியும். இப்படி கருப்பையின் அளவை பரிசோதனை செய்துதான் வயிற்றிலுள்ள குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா,இல்லையா என்று டாக்டர்கள் கண்டுபிடிப்பார்கள்.

பரிசோதனைகள்!

கர்ப்பமடைந்த பிறகு டாக்டரை சந்திக்கப்போகும் முதல் விசிட்டில், சில ப்ளட் டெஸ்ட்களை செய்ய சொல்லி அறிவுறுத்துவார். அவைகள்;

ற நீங்கள் அனிமிக்காக (ரத்தசோகை) இருக்கிறீர்களா என்று கண்டுபிடிக்கும் ஹீமோகுளோபின் (Haemoglobin)) மற்றும் ஹீமோடோக்ரிட் (Haematocrit) டெஸ்ட்.

ீ ப்ளட் குரூப் மற்றும் ஆர்.எச்.டைப் டெஸ்ட் இந்த டெஸ்ட் எதற்காக முக்கியம் என்றால் நீங்கள் ஆர்.எச். நெகடிவா அல்லது பாஸிடிவா என்று தெரிந்துக் கொள்வது முக்கியம்.

ீவி.டி.ஆர்.ஆ (அ) ஆர்.பி.ஆர். டெஸ்ட்கள்; சிபிள்ஸ் (syphilis)என்ற தொற்று நோய்க்கான அறிகுறி. இந்த நோய் அரிதாக இருந்தாலும் குழந்தைக்கு ஊனம் ஏற்படுத்தலாம்.

ீ தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவக் கூடிய ஹெப்பாடைடிஸ் `பி’ மற்றும் ஹெ.ஐ.வி.க்கான டெஸ்ட் செய்வார்கள். ஏனென்றால் இது பாசிட்டிவாக இருந்தால் குழந்தைக்கு வராமல் தடுக்க முயற்சி செய்யலாம்.

ீ கர்ப்பத்தின் 6 அல்லது 7 மாதத்தில் டயாபடீஸீக்கான டெஸ்ட் செய்யப்படும். ஏனென்றால் இந்தியப் பெண்களுக்கு கர்ப்பத்தின்போது டயாபடீஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

டவுன் சின்ட்ரோம் டெஸ்ட்!

குழந்தைகளுக்கு மென்டல் ரிட்டார்டேஷன் வருவதற்கு டவுன் சின்ட்ரோம்தான் முதல் காரணம். அந்தக் குழந்தைக்கு 21வது குரோமோசோம் அதிகமாக இருப்பதால் இந்த பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு எந்த வயதிலும் டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதால் இந்த டெஸ்ட் செய்வது நல்லது. வயது அதிகமாக ஆக டவுன் சின்ட்ரோம் வாய்ப்பும் அதிகமாகும். அதனால் 35வயதில் இருந்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் இந்த டெஸ்ட் பற்றி ஆலோசிக்க வேண்டும். டவுன் சின்ட்ரோம் டெஸ்ட்டில் பிளட் டெஸ்ட் மற்றும் அல்ட்ரா சவுண்ட் என இரண்டு டெஸ்ட்களை செய்வார்கள். இந்த டெஸ்ட்களின் ரிசல்ட் பாசிட்டிவாக வந்தால் நீங்கள் அடுத்தக்கட்டமாக கருப்பையின் உள்ளே இருக்கும் அம்னியோடிக் திரவத்தை எடுத்து டெஸ்ட் செய்வார்கள். இதற்கு `அம்னியோசென்டிஸிஸ்’ என்று பெயர்.

கருவின் இதயத்துடிப்பை கேட்டல்!

ஃபீட்டோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு எலக்ட்ரானிக் கருவியால் மூன்று மாத கருவின் இதயத் துடிப்பை கேட்க முடியும். ஆனால் உங்கள் டாக்டரிடம் ரெகுலர் ஃபீட்டோஸ்கோப் இருந்தால் கருவின் இதயத்துடிப்பை 5-ம் மாதத்தில் இருந்துதான் கேட்க முடியும். இப்படி கருவின் இதயத்துடிப்பை கேட்பதன் மூலம் கரு ஹெலத்தியாகவும், நல்லபடியாகவும் இருப்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

உங்களுடைய ரத்த அழுத்தத்தை பரிசோதித்தல்!

நீங்கள் ஒவ்வொரு முறை டாக்டரை சந்திக்க செல்லும்போது அவர் உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வார். இதன் மூலம் உங்கள் டாக்டர் உங்களுடைய ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கிறதா, இல்லையா என்று கவனிப்பார். இந்தியப் பெண்களுக்கு ரத்த அழுத்தம் 90/60 (mmHg) முதல் 120/80 (mmHg) வரைக்கும் இருக்கலாம்.

சாதாரணமாக குறைந்த ரத்த அழுத்தம் என்று ஒன்றுமில்லை. எப்போது 140/90 (mm Hg) அதிகமானால் அந்தப் பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் எடையை செக் செய்தல்!

ஒவ்வெரு செக்கப்பின் போது உங்கள் வெயிட்டை டாக்டர் பதிவு செய்து கொள்வார். கர்ப்பமாக இருக்கும்போது மாதம் ஒன்றுக்கு அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் வெயிட் போடலாம். மொத்தமாக பார்க்கும்போது 10-லிருந்து 12 கிலோ வரை வெயிட் போடுவது நார்மல்தான். உங்கள் வெயிட் இதை விட மிகவும் குறைவாக இருந்தால், குழந்தை மிகச் சிறியதாக பிறக்கலாம். உங்கள் வெயிட் அதிகமாக இருந்தாலோ டெலிவரிக்கு பிறகு பிறகு அதைக் குறைப்பது மிகவும் கடினமாகி விடலாம்.

யூரின் டெஸ்ட்!

ஒவ்வொரு தடவை டாக்டரை பார்க்க செல்லும் போது `யூரினில் அல்புமின் (albumin) மற்றும் சுகர் இருக்கிறதா என்று டெஸ்ட்’ செய்வார்கள். யூரினில் சுகர் இருந்தால் இரத்தத்திலும் சுகர் இருக்கிறதா என்று டெஸ்ட் செய்வார்கள். யூரினில் உப்பு இருந்தால் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

அல்ட்ரா சவுண்டு பரிசோதனை!!

கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை தெரிந்துக்கொள்வதற்காக உங்கள் டாக்டர் உங்களை அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யச் சொல்லுவார். பொதுவாக இந்த ஸ்கேன்கள் மூன்றாம் மாதத்திலும், 5 அல்லது 6-ம் மாதத்தின் இடையிலும் செய்யப்படும். கடைசி 3 மாதத்தில் தேவைப்பட்டால் மறுபடியும் ஒரு ஸ்கேன் செய்ய சொல்லுவார்கள்.

மறுமுறை செக்கப் செய்தல்!

பொதுவாக கருத்தரித்த 32-வது வாரம் வரை மாதம் ஒரு முறையும் அதன் பிறகு 2 வாரத்துக்கு ஒரு முறையும் செக்கப் செய்யப்படும். கடைசிமாதத்தில் மட்டும் வாரம் ஒரு முறை செக்கப் செய்யப்படும்!
ht2590

Related posts

வாய் நாற்றம் ஏற்படுவது ஏன் தெரியுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

nathan

ஹார்மோன் குறைவால் ஏற்படும் நோய்கள்

nathan

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

nathan

சித்த மருத்துவத்தில் கூறப்படும் அழகுக் குறிப்புகள்

nathan

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன ?

nathan

முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ஆலோசனைகள்

nathan

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் 8 யோகாசனங்கள்!!!

nathan