பெண்கள் எதிர்கொள்ளும் மிகவும் தர்மசங்கடமான அழகு பிரச்சனைகளுள் ஒன்று அந்தரங்க பகுதி கருமையாக இருப்பது. அந்தரங்க பகுதி கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உராய்வு, அரிப்புக்கள், இறுக்கமான ஆடைகள், வியர்வை மற்றும் ஹார்மோன்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்தரங்க பகுதி என்று கூறும் போது, அதில் பிறப்புறுப்பு மட்டுமின்றி தொடையின் உள் பகுதியும் அடங்கும்.
இப்படி கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டும் எளிதில் சரும கருமையைப் போக்கலாம். கீழே கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதோடு, இது அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தணிக்கவும் உதவும். அதற்கு தயிரை தினமும் கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
கடலை மாவு
கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கருப்பான அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதோடு, கருமையான சருமத்தை வெள்ளையாக்கவும் செய்யும். அதற்கு கற்றாழை ஜெல்லை அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள்
சரும கருமையைப் போக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அழகுப் பொருள் தான் மஞ்சள். மறுபுறம், ஆரஞ்சு ஜூஸ் ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும். அதற்கு 3 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டர் மற்றும் சந்தன பவுடர்
பொதுவாக சந்தனம் சரும கருமையைப் போக்கக்கூடியது. ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையான அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வெட்டி, கருமையான அந்தரங்க பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையான பகுதியை வெள்ளையாக்க உதவும்.