22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
1591011
சிற்றுண்டி வகைகள்

வீட்டிலேயே செய்யலாம் சுவையான தேங்காய் பிஸ்கட்

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 100 கிராம்

வெண்ணெய் – 80 கிராம்
சர்க்கரை – 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் – 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் – அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் – 15 கிராம்
உப்பு – சிட்டிகை

செய்முறை

முதலில் உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும்.

அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பி

ன் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.

சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.

Related posts

கொழுக்கட்டை

nathan

ஒப்புட்டு

nathan

சேமியா பொங்கல்

nathan

சம்பல் ரொட்டி

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

nathan

இறால் கட்லெட்

nathan

காஷ்மீரி கல்லி

nathan