27.4 C
Chennai
Tuesday, Nov 19, 2024
hqdefault1
அசைவ வகைகள்

மட்டன் ரொட்டி கறி குருமா

தேவையானபொருள்கள்

மட்டன் கறி – முக்கால் கிலோ
டால்டா – 200 கிராம்
மைதா மாவு – 2 1/2 கப்
ஏலம் – 3
பட்டை – 3
கிராம்பு – 3
இஞ்சி – ஒரு துண்டு
வெங்காயம் – 4 பெரியது
தேங்காய் – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
புதினா – ஒரு கட்டு
பூண்டு – 3
தக்காளி – 4
பச்சைமிளகாய் – 10
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – சிறிதளவு
மல்லிக்கீரை – ஒரு சிறியகட்டு

செய்முறை

*முதலில் மாவை கொஞ்சம் உப்புத் தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து ரொட்டி போல் மெல்லிசாக வார்த்து கத்தியால் சதுரமாக சிறுசிறு துண்டுகளாக வெட்டி காய வைக்கவும்.

*நன்கு காய்ந்த பிறகு அவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*இஞ்சியையும், பூண்டையும் நன்கு மைப் போல் அரைத்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து டால்டாவை அதில் போட்டு சூடானதும் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வெங்காயம் சிவக்க வதக்கவும்.

*அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் ஏலம், பட்டை, கிராம்பையும் போட்டுக் கிளறவும்.

*இதனுடன் கறி, பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் போட்டு தேவையான உப்பும் போட்டு ஓர் ஆழாக்குத் தண்ணீர் ஊற்றி புதினாவும் மல்லிக்கீரையும் போட்டு வேக வைக்கவும்.

*ஒரு தேங்காயைத் துருவி அதில் முதல் பால் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் காய வைத்திருக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொட்டி கிளறி விட்டு அவற்றை எடுத்து கறி குருமாவில் கொட்டி தம்மில் வைத்து இறக்கவும்.

* இப்போது சுவையான ரொட்டி கறி குருமா தயார்.
hqdefault

Related posts

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

nathan

சுவையான நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

ஃபிங்கர் சிக்கன்

nathan

தந்தூரி சிக்கன்,அசைவம், அசைவம், அறுசுவை, தந்தூரி சிக்கன்

nathan

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் கோழி பிரியாணி

nathan

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்யலாம் வாங்க!

nathan

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

கொங்குநாடு சிக்கன் ப்ரை

nathan

செட்டிநாடு முட்டை குழம்பு

nathan