35 C
Chennai
Wednesday, Jul 2, 2025
15
சைவம்

பேபி கார்ன் பனீர் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி சாதம் – ஒரு கப், பேபிகார்ன் துண்டுகள், பனீர் – தலா ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 2, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 4 பல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பேபிகார்னை வேக வைத்து தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் சீரகம், பூண்டு, நறுக்கிய வெங் காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு சூடுபட கிளறவும். அதனுடன் தக்காளி துண்டுகள், வேக வைத்த கார்ன், பனீர் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாதூள் உப்பு போட்டு நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் இறக்கி, சாதம் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்… பேபிகார்ன் – பனீர் பிரியாணி தயார்.
இது சத்தும், சுவையும் நிறைந்தது. இதற்கு பச்சடி, சிப்ஸ் தொட்டுச் சாப்பிடலாம்.
1

Related posts

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

வாழைப்பூ – முருங்கை கீரை வதக்கல்

nathan

பாஸ்தா பிரியாணி

nathan

பேபி உருளைக்கிழங்கு கறி

nathan

வேப்பம்பூ சாதம்

nathan

ஆலு பலாக் ரைஸ்

nathan

வெஜிடபிள் கறி

nathan