p105
சிற்றுண்டி வகைகள்

அவல் – பொட்டேட்டோ மிக்ஸ்

தேவையானவை:

கெட்டி அவல் – 200 கிராம், உருளைக்கிழங்கு – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு, எண்ணெய் – 150 கிராம், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

கெட்டி அவலை சிறிது நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். ஊறிய அவல், பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு புரட்டவும். உப்பு, எலுமிச்சைச் சாறு, வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
p105

Related posts

பாலக் பூரி

nathan

சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை

nathan

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

nathan

சந்தேஷ்

nathan

சுவையான மொறுமொறு கோலா உருண்டை

nathan

கருப்பட்டி இட்லி

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan

விருதுநகர் புரோட்டா

nathan

சீஸ் போண்டா

nathan