25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
15534992
தலைமுடி சிகிச்சை

நரை முடி பிரச்சினையால் தொடர்ந்து அவதியா?அப்போ இதை செய்யுங்கோ..!!

நரை முடி பிரச்சினை இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. அதை சரிசெய்ய பல வழிமுறைகள் இருந்தாலும், மருதாணி மற்றும் இண்டிகோ சிகிச்சை சிறப்பாக உதவும். இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

இரண்டு வழிகளில் இதை பயன்படுத்தலாம். இரண்டையும் சேர்த்து கலக்க முடியாது. அது உங்களுக்கு பழுப்பு அல்லது வேறு நிறத்தை கொடுக்கலாம். முதலில் மருதாணி அதன் பிறகு இண்டிகோ பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்

மருதாணி- 100 கிராம் ( கூந்தலுக்கு ஏற்ப)
இண்டிகோ பொடி – 100 கிராம் (கூந்தலுக்கு ஏற்ப)
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு – 2 டீஸ்பூன்
முதலில், கருப்பு முடிக்கு மருதாணி மற்றும் இண்டிகோ கலவையை பயன்படுத்துதல். மருதாணி மற்றும் எலுமிச்சை சாற்றை பாத்திரத்தில் இணைக்கவும். தண்ணீர் சேர்க்க ஆரம்பித்து இந்த கலவையை தடிமனான பேஸ்ட் பதத்துக்கு கிளறவும்.

இதையடுத்து, இதை மூடி இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை ரப்பர் கையுறை அணிந்து தலைமுடியை சிக்கில்லாமல் சீவி பகுதி பகுதியாக பிரிக்கவும். பிறகு ஹேர் கலரிங் பிரஷ் மூலம் தடவி விடவும்.

அதன் பிறகு டை இட்ட கூந்தல் பகுதியை சுருட்டி தலையில் ஒட்டி எடுக்கவும். பிறகு ஷவர் கேப் அணிந்து இரண்டு மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். ஷாம்பு மற்றும் கண்டிஷனர் எதுவும் பயன்படுத்த வேண்டாம்.

மேலும், இண்டிகோ பவுடரை உப்பு மற்றும் சோளமாவு கலந்து மெதுவாக ஒரு தடிமனான பேஸ்ட் கிடைக்கும் வரை கலக்கவும். தலைமுடியை பகுதியாக பிரித்து இண்டிகோ பேஸ்ட்டை போடவும். பின்னர் ஷவர் தொப்பியை போட்டு இரவில் விட்டு விடுங்கள். மறுநாள் அலசி எடுங்கள்.

அடுத்த 2 அலல்து 3 நாட்களுக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டாம். கருப்பு நிறம் முழுமையாக வளர இரண்டு நாட்கள் ஆகலாம். இண்டிகோ அல்லது அவுரிப்பொடி என்று அழைக்கப்படும் இயற்கை சாயம். முக்கியமாக ஆடைகளுக்கு சாயம் போட இவை பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக டெனிம், ஜவுளி சாயமிடுதல் மற்றும் அச்ச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் பழமையான சாயங்களில் இதுவும் ஒன்று. தற்போது கூந்தல் கருப்புக்கு மருதாணியுடன் இவை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது கரு நீல நிறத்தை அளிக்கும் அவுரிப்பொடி ஆரஞ்சு நிற மருதாணியுடன் இணைந்து கூந்தலுக்கு அடர்த்தியான கருப்பு நிறத்தை அளிக்கிறது.

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அழகு பொருள்கள் கடைகளிலும் கிடைக்கும். பேச பேச தீராத நன்மைகளை கொண்டவை மருதாணி. இது சரும பராமரிப்பு மருத்துவர் என்று சொல்லலாம்.

மருதாணி சருமம், கூந்தல் என இரண்டிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள். வீட்டில் மட்டும் அல்லாமல் அழகு தயாரிப்பு பொருள்களிலும் இவை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மருதாணி இலைகளை உலர்த்தி மிக்ஸியில் பொடியாக்கி மஸ்லின் துணியில் சலித்து பதப்படுத்தி பயன்படுத்தலாம். கண்ணை கவரும் நிறத்தை அளிக்கு மருதாணி குறித்து ஏற்கனவே பல முறை பார்த்திருக்கிறோம்.

Related posts

உடனே செய்யுங்க ! ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

nathan

முடி கொட்டுதல்? இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும்…

nathan

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை -பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்…!

nathan

தலைமுடி அடர்த்தியாக வளர மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்‌ ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அதிகமா முடி கொட்டுதா? கரணம் இதுதான்!

nathan

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உறுதியான தலை முடிக்கு……

nathan

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

nathan