28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
k 6
மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? சிறுநீர் கழிப்பதைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை

ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.

ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.

இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?

* சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.

* சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழித்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது. இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படுகிறது. தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.

* குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.

* கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன்மையை மேம்படுத்த முடியும். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அப்பயிற்சியினை செய்யலாம். தினந்தோறும் செய்ய வேண்டிய அப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.

Courtesy: MalaiMalar

Related posts

இந்த ஒரு எண்ணெய் போதும்..வெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா?

nathan

தெரிந்துகொள்வோமா? எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

உடலில் நாடாப்புழு உருவாவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்…!அவசியம் படிக்க..

nathan

தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி

nathan

கர்ப்பிணிகளுக்குப் எளிய சித்த மருந்துகள்

nathan

அடேங்கப்பா! இந்த மரத்தின் பட்டையில் இவ்வளவு மருத்துவம் இருக்கா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . .

nathan

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

nathan