25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
diabetestype2
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…யாருக்கெல்லாம் டைப்-2 சர்க்கரை நோய் வரும் எனத் தெரியுமா?

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, 2015 ஆம் ஆண்டு உலகில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். சர்க்கரை நோயில் 3 வகைகள் உள்ளன. அதில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்ப கால சர்க்கரை நோய். இந்த மூன்றில், டைப்-2 சர்க்கரை நோயால் தான் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர்.

உலகில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் டைப்-2 சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் மதிப்பிடுகின்றன. டைப்-2 சர்க்கரை நோயில், கணையமானது இன்சுலினை உருவாக்கும். ஆனால் செல்களால் அந்த இன்சுலினைப் பயன்படுத்த முடியாமல் போகும். இந்நேரத்தில் தான் இன்சுலின் ஊசிகளை போட வேண்டிய நிலைமை சர்க்கரை நோயாளிகளுக்கு வருகிறது.

ஆரம்பத்தில் கணையமானது அதிகளவு இன்சுலியை உருவாக்கி, க்ளுக்கோஸை செல்களுக்கு நகர்த்த முயற்சிக்கும். ஆனால் இதை சமாளிக்க முடியாமல், இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். டைப்-2 சர்க்கரை நோய் உள்ள பலருக்கு, தங்களுக்கு இப்பிரச்சனை இருப்பதே தெரியாது. இதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடும். எனவே ஒவ்வொருவரும் சர்க்கரை நோய்க்கான காரணிகள் எவையென்று தெரிந்து கொள் வேண்டியது அவசியம்.

ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக குணமாக முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். இக்கட்டுரையில் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

குடும்ப வரலாறு

உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன் பிறப்புகளுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகம் உள்ளது. டயட் மற்றும் குறிப்பிட்ட வைரஸ்களின் தாக்கத்தினால் சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கும். மரபணு காரணங்களால் சர்க்கரை நோய் வருவதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நிச்சயமாக தூண்டுதல்களைத் தவிர்க்க முயற்சி செய்யலாம்.

இனம்

குடும்ப வரலாறு மட்டுமின்றி, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் அதிகம் உள்ளது. ஹிஸ்பானியர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஹவாய், பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஆசியர்கள் போன்றோர் நீரிழிவு நோயை அதிகரிக்கும் அபாயத்தில் உள்ளனர். 2016-இல் வெளிவந்த ஆய்வில் வெள்ளையர்களை விட ஆசியர்கள், ஹிஸ்பானியர்கள் மற்றும் கருப்பர்கள் போன்றோர்களை சோதித்ததில் சர்க்கரை நோயின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே நீங்கள் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், ஆசியர்கள், லத்தினோ/ஹிஸ்பானியர்கள், பூர்வீக அமெரிக்கர்களாக இருந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க வாழ்க்கைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வயது

வயது அதிகரிக்கும் போது, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயமும் அதிகரிக்கும். பெரும்பாலும், நடுத்தர வயதினர், அதுவும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் டைப்-2 சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் குறைவான உடற்பயிற்சி, தசை இழப்பு மற்றும் வயது அதிகரிக்கும் போது உடல் எடை அதிகரிப்பது போன்றவைகள் தான்.

இருப்பினும் தற்போது டைப்-2 சர்க்கரை நோய் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் வந்துவிடுகிறது. மேலும் உடல்நல நிபுணர்கள், 40 வயது எட்டிவிட்டால், ஒவ்வொரு மாதமும் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க பரிந்துரைக்கிறார்கள். இதனால் ஆரம்பத்திலேயே டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

கர்ப்ப கால நீரிழிவு

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தால், அதையே கர்ப்ப கால நீழிரிவு என்று கூறுவர். இத்தகையவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் அபாயம் அதிகம் இருக்கும். 2013 இல் வெளிவந்த பத்திரிக்கை ஒன்றில், கர்ப்ப கால நீரிழிவு வரும் பெண்களுக்கு, பிற்காலத்தில் டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரு குழந்தை பிறக்கும் போது 9 பவுண்டிற்கும் அதிகமான எடையில் இருந்தால், அக்குழந்தைக்கு டைப்-2 நீரிழிவு வரும் அபாயம் அதிகம் உள்ளது. இதைத் தவிர்க்க ஒரே வழி, வாழ்க்கை முறையில் மாற்றங்களுடன், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதும் தான்.

உடல் பருமன்

உடல் பருமன் கொண்டவர்களுக்கு இளமையிலேயே டைப்-2 நீரிழிவு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. உடல் பருமன் அதிகரிக்கும் போது, உடலினுள் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு, அதனால் ஊட்டச்சத்துக்களை சரியாக செயல்முறைப்படுத்த முடியாமல், ஒரு கட்டத்தில் இரத்தத்தில் க்ளுக்கோஸின் அளவை அதிகரிக்கும்.

அதிலும் ஒருவருக்கு உடலின் மற்ற பாகங்களை விட, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகளவில் இருந்தால், அதனால் டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஆனால் இத்தகையவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இவர்கள் தங்களது உடல் எடையைக் குறைத்தால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயமும் குறையும்.

உடலுழைப்பு இல்லாமை

டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளுள் ஒன்று உடலுழைப்பு இல்லாமை. எவர் ஒருவர் உடலுக்கு போதிய வேலைக் கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்து உள்ளார்களோ, அவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கும். 2011 இல் வெளிவந்த இதழில், தொடர்ச்சியான உடலுழைப்பு இல்லாதவர்களது உடலில் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபடுங்கள்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இதயம் பாதிக்கப்படுவதோடு, அதன் விளைவாக சர்க்கரை நோயின் அபாயமும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணிற்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் தான், கர்ப்ப கால சர்க்கரை நோய் வருகிறது என்று தெரியுமா? கர்ப்ப கால சர்க்கரை நோய் வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்திலேயே இரத்த சர்க்கரை அளவையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்காவிட்டால், நிச்சயம் டைப்-2 சர்க்கரை நோய் வரும். எனவே கவனமாக இருங்கள்.

அசாதாரண கொலஸ்ட்ரால் அளவு

ஒருவரது உடலில் நல்ல கொலஸ்ட்ராவிள் அளவு குறைவாக இருந்து, ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகம் இருந்தால், அதனால் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்துடன், இதய நோயும் வரக்கூடும். 2016-இல் இதய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது. எனவே கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் அதிகரித்து, வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட நேரிடும்.

முன் நீரிழிவு

முன் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கும். முன் நீரிழிவு என்பது இரத்த சர்க்கரை அளவை சாதாரண அளவை விட சற்று உயர்ந்து இருந்தால் இருக்கும் நிலையாகும். இந்த முன் நீரிழிவு இருப்பவர்கள், தங்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வந்தால், 40-70 சதவீதம் டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது. பொதுவாக PCOS இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் இருப்பதோடு, உடல் பருமனுடனும் இருக்கும். எனவே PCOS இருந்தால், அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பதைத் தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்து வாருங்கள்.

Related posts

காதலை ஏற்பதா? வேண்டாமா? அதிரடியான ஒரு பரிசோதனை

nathan

கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்,pregnancy tips

nathan

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி

nathan

உங்கள் பாதங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

nathan

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

nathan

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா?

nathan

தேங்காய்ப் பாலின் மகத்துவம்!

nathan

பெண்களுக்கு மல ட்டுத் தன்மை ஏற்படுவது ஏன்? ஆய்வில் அதி ர்ச்சி தகவல்!

nathan

கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்!!!

nathan