29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
belly juice 1
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…தொப்பை மற்றும் எடையை வேகமாக குறைக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க…

இன்று ஒவ்வொருவரும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையால் கஷ்டப்படுவதற்கு, உடல் பருமனும் ஓர் காரணம். ஒருவரது உடல் எடை உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாவிட்டால், அந்த ஒரு காரணத்தினாலேயே உடலினுள் பல பிரச்சனைகள் வந்துவிடும். எனவே ஒவ்வொருவரும் சரியான உடல் எடையைப் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமாகும். உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, உண்ணும் உணவில் மட்டுமின்றி, குடிக்கும் பானங்களிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.

இன்று கடைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம் நிறைந்த எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள், குளிர்பானங்கள் போன்றவை அதிகம் விற்கப்படுகிறது. பலரும் இவைகளை விரும்பி வாங்கிக் குடிக்கிறார்கள். ஆனால் இந்த பானங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது பெரும் தடையாக இருக்கும் என்பது தெரியுமா?

நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க அன்றாட உடற்பயிற்சியுடன், சரியான உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருபவராயின், எடையை குறைக்கத் தூண்டும் ஒருசில பானங்களையும் உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பானங்கள் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்முறை வேகத்தை நீங்கள் நினைப்பதை விட அதிகமாக்கும்.

இக்கட்டுரையில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில அற்புத பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அன்றாட டயட்டில் தவறாமல் சேர்த்து, சிக்கென்ற உடலைப் பெறுங்கள்.

இளநீர்

எடையைக் குறைக்க உதவும் அற்புத பானங்களுள் ஒன்று இளநீர். இது பலருக்கும் பிடித்தமான ஓர் பானம். தற்போது இதன் விலையோ அதிகம். இருப்பினும், இதில் மற்ற பானங்களை விட அதிகமான அளவில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இந்த பானத்தை ஒருவர் குடித்தால், உடலில் இயற்கையாக மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்து எடை குறைவதோடு, உடலின் ஆற்றலும் மேம்படும். இதனால் நாள் முழுவதும் வலிமையுடனும், ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

தயிர் சேர்க்கப்பட்ட ஸ்மூத்திகள்

தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூத்திகள் வயிற்றை நிரப்புவதோடு, அதில் கால்சியமும் அதிகளவில் நிறைந்துள்ளது. பல ஆராய்ச்சியாளர்கள், தயிரை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், 81% வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைப்பதோடு, 61% இதர கொழுப்புக்களைக் கரைக்கும். ஏனெனில் தயிரில் உள்ள கால்சியம் கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, உடலில் உற்பத்தி செய்யப்படும் கொழுப்புக்களின் அளவையும் கட்டுப்படுத்தும். அதிலும் க்ரீக் தயிரை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

வே புரோட்டீன்

வே புரோட்டீன்கள் பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் வெளியீட்டைக் குறைத்து, உணவின் மீதுள்ள நாட்டத்தைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வு ஒன்றில் யார் ஒருவர் வே புரோட்டீனை குடிக்கிறார்களோ, அவர்களால் 90 நிமிடங்களுக்கு பின் நன்கு வயிறு நிறைய சாப்பிட முடியுமாம். ஆனால் அவர்களால் குறைந்த அளவு கலோரிகளையே உட்கொண்டிருப்பார்களாம். ஆகவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் வே புரோட்டீனை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்புச் செல்களை உடைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். அதற்காக தினமும் பாலை அதிக அளவில் குடிக்க வேண்டும் என்பதில்லை. எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட்டில் பாலையும் அளவாக சேர்த்துக் கொளுங்கள். இதனால் உடல் எடையைக் குறைக்கும் செயல்முறை வேகப்படுத்தப்படும்.

தண்ணீர்

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறப்பான ஒன்று தண்ணீர். இது உடலினுள்பல்வேறு அற்புதங்களை உண்டாக்கும். சொல்லப்போனால், உடலினுள் உள்ள கொழுப்புச் செல்களை எளிதில் உடைப்பதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. தண்ணீர் குடிப்பதால், உடலினுள் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் ஆற்றல் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். அதற்காக எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள். நீங்கள் இதுவரை குடித்து வந்த அளவு நீரை விட அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். அத்துடன் போதுமான உடற்பயிற்சியையும், சரியான டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதால், உடல் சுத்தமாக இருப்பதோடு, உடலினுள் உள்ள அனைத்து உறுப்புக்களும் சரியாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.

பப்பளிமாஸ் ஜூஸ்

நற்பதமான பப்பளிமாஸ் ஜூஸ் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் பானங்களுள் ஒன்று. பப்பாளிமாஸ் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலை இயற்கையாகவே சுத்தமாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இப்பழம் கல்லீரலை சுத்தமாக வைப்பதோடு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியத்திற்கும் உதவும். அதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கவும் உதவும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

நம் அனைவருக்குமே தண்ணீர் ஒரு நீர்ப்பெருக்கிப் பண்புகளைக் கொண்டது என்பது தெரியும். அத்தகைய நீருடன் கிரான்பெர்ரி பழச்சாற்றினை சேர்த்து கலந்து குடித்தால், அது கொழுப்புக்களைக் கரைத்து, உடலினுள் மாயங்களை உண்டாக்கும். அதற்கு 8 அவுன்ஸ் 100% கிரான்பெர்ரி ஜூஸில், 5-6 அவுன்ஸ் நீர் சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தில் சுவைக்காக சர்க்கரை எதுவும் சேர்க்கக்கூடாது. இந்த பானத்தை குடித்தால், அதில் உள்ள அமிலம், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரையச் செய்து, உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

கொழுப்பை கரைக்கும் நீர்

கொழுப்பைக் கரைக்கும் நீரில் வைட்டமின் சி ஏராளமான அளவில் இருக்கும். இது உடலினுள் உள்ள கொழுப்புக்களை எரிப்பொருளாக மாற்றிவிடும். குறிப்பாக இந்த நீரில் டேன்ஜெரின் என்னும் கிச்சிலிப் பழ வகையை சேர்த்திருந்தால், அது இன்சுலின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் வெள்ளரிக்காய் உடலை ஆற்றலுடன் வைத்திருக்கும். எடையைக் குறைக்க நினைப்போர் இந்த பானத்தை தவறாமல் தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வர, உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ப்ளாக் காபி

ப்ளாக் காபியை ஒருவர் அளவாக குடித்து வந்தால், அது ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இது ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து தடுப்பதோடு, புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும். அதோடு ப்ளாக் காபி நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் மற்றும் இதய நோய்களைத் தடுக்கும். இதில் உள்ள காப்ஃபைன் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். இருப்பினும் ப்ளாக் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரை அல்லது பால் எதையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், அதுவே உங்கள் எடையை அதிகரித்துவிடும்.

பழச்சாறுகள்

பழச்சாறுகளில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பழச்சாறுகளை ஒருவர் வீட்டிலேயே தயாரித்துக் குடிக்கலாம். அதில் பேரிக்காய் மற்றும் கிரான்பெர்ரி மிகவும் சுவையான கலவை. இந்த பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், அதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறைவதோடு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு வேண்டிய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். முக்கியமாக கிரான்பெர்ரி சிறுநீர்ப்பை பிரச்சனைகளைத் தடுக்கும்.

பேரிக்காயில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை ஏராளமாக உள்ளது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மிகவும் அவசியமான சத்துக்களாலும். அத்துடன் இப்பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் தேவையான சத்துக்களும் உள்ளன.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது அனைவருக்குமே தெரியும். ஜப்பானில் இந்த க்ரீன் டீ மிகவும் பிரபலமான ஓர் பானம். அங்கு மக்கள் இந்த டீயைத் தான் அன்றாடம் குடிப்பார்கள். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மற்றும் ஒருவரை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும். முக்கியமாக க்ரீன் டீயை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், அது உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில், இது உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, உடலில் கொழுப்பைக் கரைக்கும் செயல்பாட்டை அதிகரிக்கும். முக்கியமாக க்ரீன் டீ பசியைக் குறைத்து, உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிக்கும்.

காய்கறி ஜூஸ்கள்

எடையைக் குறைக்க நினைப்போருக்கு காய்கறி ஜூஸ் மிகவும் அற்புதமான பானமாகும். இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், அது கொழுப்புச் செல்களை உடைத்தெறிவதோடு, டாக்ஸின்களையும் உடலில் இருந்து வெளியேற்றும். மேலும் காய்கறி ஜூஸ்கள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்க்க உதவுவதாடு, உடல் ஆரோக்கியத்தையும், ஹார்மோன்களையும் சமநிலையில் வைத்துக் கொள்ளும். அதோடு, இந்த காய்கறி ஜூஸ்களில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் கொழுப்பு மற்றும் உடலினுள் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ளும்.

Related posts

கண் கட்டி மற்றும் விஷத்தை விரட்டும் நெல்லிக்கனியின் அருமை உங்களில் எதனை பேருக்கு தெரியும்?

nathan

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

nathan

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிந்து கொள்ள

nathan

இன்றைய இளம் தலைமுறையினருக்கு தற்கொலை எண்ணம் வரக்காரணம்

nathan

கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க தெரியுமா!தெரிஞ்சிக்கங்க…

nathan

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

nathan

பதற வைக்கும் தகவல்! இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..!

nathan

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

nathan