ஆரோக்கியமான முடியை கொண்டிருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் எப்போதும் ஆசைப்படுகின்றனர்.
நீளமான முடி என்பது மட்டுமே ஆரோக்கியமான முடியை குறிக்காது, முடி உதிர்தல், பொடுகு பிரச்சனைகள் மற்றும் முடி உடைதல் என அனைத்து பிரச்சனைகளும் முடி ஆரோக்கியத்தில் அடங்கும்.
இதற்கு பல்வேறு ஹேர் ப்ராடக்டுகள் கடைகளில் கிடைக்கின்றன, ஆனால் அனைவரது முடியும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
முடிகள் நபர் பொறுத்து மாறுபடுகின்றன, எனவே அனைத்து முடி பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும் தயாரிப்புகளை நாம் வீட்டிலேயே செய்ய முடியும்.
எனவே முடியை பொறுத்து அதற்கான பொருட்களையும் மாற்ற வேண்டும், பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு உதவும் சில ஹேர் மாஸ்க் முறைகளையும் மற்றும் ஹேர் மாஸ்க் தயாரிப்புகளையும் இப்போது பார்க்கலாம்.
தேன் மற்றும் சூடான எண்ணெய் ஹேர் மாஸ்க்
தேன் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்களை கொண்டுள்ளன. இதனால் தேன் முடியின் பிரகாசத்திற்கு உதவுகிறது.
மேலும் இதனுடன் ஆலிவ் எண்ணெயை சூடாக சேர்க்கும்போது அவை மேலும் நன்மையை செய்கின்றன.
ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இது முடியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இப்போது இந்த மாஸ்க்கை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுத்தமான தேன் – 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
தேன் மற்றும் எண்ணெய் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் நன்றாக கலக்கவும். பிறகு இந்த கலவையை நன்கு சூடாக்கவும், தேன் நல்ல திரவ நிலையை அடையும்வரை சூடாக்கவும்.
பிறகு அதை சற்று ஆற வைக்கவும், பயன்படுத்துவதற்கு முன்பாக வெப்பநிலையை பரிசோதிக்கவும். பிறகு இந்த கலவையை ஈரமான கூந்தலில் தடவவும், முடியின் ஒவ்வொரு பகுதியிலும் தடவி முடியின் வேர்கள் வரையிலும் தடவவும்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை அதை தலையில் வைத்திருக்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசவும்.