30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1496055186
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் செய்யும் இந்த காரியங்கள் உங்கள் குழந்தைகளை வெறுப்படைய செய்யும் என தெரியுமா?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. உங்கள் பாசமே குழந்தை உங்களை வெறுக்க காரணமாகிறது. குழந்தைகள் உங்களை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை பற்றி காண்போம்.

1. அதிகமான கண்டிப்பு

குழந்தைகளை ஒரளவு கண்டிப்பது சரி. எங்கே குழந்தை தவறான வழியில் சென்றுவிடுமோ என்று நினைத்து அதிகமாக கண்டித்து வைப்பது குழந்தைகள் மனதை புண்படுத்தும்.

2. குழந்தைகள் மீது கவனகுறைவு

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர், தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை. வீட்டில் இருக்கும் போது கூட வேலை வேலை என வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், குழந்தைகள் பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கி போய்விடுகின்றனர்.

3. எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே தேவைகள் இருக்கும். குழந்தைகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பெற்றோர்களையே நாடுகின்றனர். பெற்றோர்கள் அவர்களது தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.

4. சண்டைகள்

பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு சண்டை போடாமல் அமைதியாக இருக்க சொல்லி தர வேண்டும். ஆனால் பெற்றோர்களுக்குள் உண்டாகும் சண்டைகள் மற்றும் பிறருடன் பெற்றோர்கள் போடும் சண்டைகள் குழந்தைகளை வெறுப்படைய செய்கிறது.

5. மிக அதிகமான கவனிப்பு மற்றும் அக்கறை

குழந்தைகள் மீது பொதுவாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் மிக அதிகமான பாசம் மற்றும் அக்கறை ஆகியவற்றை குழந்தைகள் விரும்புவதில்லையாம். அதிக அக்கறையும் பாசமும் குழந்தைகள் தங்களது வழியில் செல்ல தடையாக இருக்கிறதாம்.

6. உடன் பிறந்தவர் மீதான பாசம்

இரண்டு குழந்தைகள் இருந்தாலும், ஒரு குழந்தையை செல்லப்பிள்ளையாக நினைத்து வளர்ப்பது, அதிக அக்கறை காட்டுவது, அந்த குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி தருவது போன்றவை மற்றொரு குழந்தையை வருத்தப்பட வைக்கும். எனவே இரண்டு குழந்தைகளையும் சமமாக கவனித்துக்கொள்வது அவசியம்.

7. கட்டாயப்படுத்துவது

இது போட்டிகள் நிறைந்த உலகம் தான். அதற்காக குழந்தைகளின் சக்திக்கு அதிகமான காரியங்களை செய்ய சொல்லி வலியுறுத்துவதால் குழந்தைகள் பெற்றோர்கள் மீது வெறுப்படைகின்றனர்.

Related posts

தக்காளி காய்ச்சல் : அறிகுறி.. சிகிச்சை முறை.. தவிர்க்கும் முறை..

nathan

அடேங்கப்பா! அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

nathan

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை நீக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

nathan

காலை 8 மணிக்குள் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்து முடிங்க உங்க வாழ்க்கை சிறப்பு தான் பாஸ்!

nathan

இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!

nathan

நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி

nathan

நீரிழிவைத் தூண்டுகிறதா கோதுமை?

nathan

வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்

nathan

சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3

nathan