தாய்ப்பாலை சேமித்து வைத்திருந்தால், அதை ஃபிரிட்ஜிலிருந்து வெளியில் எடுத்துவிட்டு மீண்டும் அந்த தாய்ப்பால் அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
அதாவது, குளிர்ச்சியோ சூடாகவோ தாய்ப்பால் இருக்க கூடாது. தாய்ப்பால் எப்படி ரூம் டெம்பரேச்சர் (அறையின் வெப்ப நிலைத்தன்மையில் இருக்கிறதோ) அதே தன்மையில் மாறிய பிறகே சேமித்து வைத்தப் பாலை கொடுக்க வேண்டும்.
சாதாரண நீர், அல்லது இளஞ்சூடான நீரில் சேமித்து வைத்த பாட்டிலை வைத்து குளிர்ச்சியைத் தணித்து அறை வெப்பநிலைக்கு தாய்ப்பாலை கொண்டு வர வேண்டும். இதற்கு 20-40 நிமிடங்கள்கூட ஆகலாம். ஆனால், இதுவே சரியான முறை.
எக்காரணத்துக்கும் தாய்ப்பாலை சூடு செய்யவே கூடாது. இது மிக மிக முக்கியம்.
தற்போது கடைகளில் பாட்டில் வாம்மர் கிடைக்கிறது. அதை வாங்கியும் நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலின் குளிர்ச்சித்தன்மையை நீக்கலாம்.
தாய்ப்பால் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள்… தீர்வுகள்…
தாய்ப்பால் சேமித்து வைத்து, அதை சூடாக்கினால் தாய்ப்பாலில் உள்ள தன்மை நீங்கிவிடும். இதைக் குழந்தைக்கு கொடுக்க கூடாது.
லேசாக குளிர்ச்சியாக தாய்ப்பால் இருந்தாலோ இளஞ்சூடாக தாய்ப்பால் இருந்தாலோ குழந்தை தாய்ப்பாலை குடிக்காது. குழந்தைக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.
சிறிதளவு குளிர்ச்சியான தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுத்தாலும், குழந்தையின் தொண்டையில் புண்கள் வரக்கூடும்.
சேமித்து வைத்த தாய்ப்பாலை குழந்தை சுவைத்துவிட்டு, மிச்சமிருக்கும் பாலை மீண்டும் ஃபிரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ சேமித்து வைக்க கூடாது. குழந்தையின் உமிழ்நீர் பட்ட தாய்ப்பாலில் கிருமிகள் படர்ந்துகொண்டே போகும். இதைக் குழந்தைக்கு மீண்டும் கொடுக்க கூடாது.
நீங்கள் சேமித்து வைக்கும் தாய்ப்பால் பாட்டிலை அவசியம் ஸ்டெரிலைஸ் செய்யுங்கள். சுகாதாரமற்ற பாட்டிலில் தாய்ப்பாலை சேமித்து வைக்க கூடாது.
சேமித்து வைத்த தாய்ப்பாலை குளிர்ச்சி நீங்கி விட்டதா என அறிய, உங்களது கைகளில் 2-3 சொட்டு விட்டு பாருங்கள். பின் அதை சுவைத்துப் பாருங்கள். குளிர்ச்சி நீங்கிவிட்டதா எனத் தெரியும்.
பிரெஸ்ட் பம்பை நன்கு ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும். ஏனெனில் பிரெஸ்ட் பம்பில் தாய்ப்பால் இருக்கும் அல்லவா… எனவே நன்கு சுத்தப்படுத்தி, ஸ்டெரிலைஸ் செய்வது மிக மிக அவசியம்.
எப்போது ஃபீடிங் பாட்டில் வேறு, தாய்ப்பால் சேகரித்து வைக்கின்ற பாட்டில் வேறு எனப் பிரித்துக் கொள்ளுங்கள்.
தாய்ப்பால் சேமிப்பதற்கென பிரத்யேகமான பாட்டில்கள் விற்கின்றன. அதைப் பயன்படுத்துவது நல்லது.
ஃபீடிங் பாட்டிலில் தாய்ப்பால் சேகரிக்க வேண்டாம். ஏனெனில் அதில் நிப்பிள் இருக்கிறது. சிறு ஓட்டையும் இருக்கிறது. அதை ஃபிரிட்ஜிலோ ஃபிரிசரிலோ வைக்க வேண்டாம். அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது.
Courtesy: MalaiMalar