எண்ணெய் சருமத்திற்கு…
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 4 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
ஆடை நீக்கிய பால்
(ஸ்கிம்டு மில்க்) – 3 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஆறிய பாலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.
கரும்புள்ளி நீங்குவதற்கு…
தேவையானவை:
கோதுமை மாவு – 2 டீஸ்பூன்
மில்க் கிரீம் – 3 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
செய்முறை: அகன்ற கிண்ணத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் மில்க் கிரீம் கலந்து குழைத்துக்கொள்ளவும். ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசவும். நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.