26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
Prawnsfry
அசைவ வகைகள்

ஸ்டைல் இறால் ப்ரை

தேவையான பொருட்கள்:
இறால்
500 கிராம்வெங்காயம்
2 (நறுக்கியது)பூண்டு –
3 பற்கள்இஞ்சி –
1 இன்ச்பச்சை மிளகாய் –
3மிளகாய் தூள் –
1 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் –
1/4 டீஸ்பூன்மல்லித் தூள்
1 டீஸ்பூன்சோம்பு தூள் –
1/2 டீஸ்பூன்தேங்காய் –
2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா
1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு
1 டேபிள் ஸ்பூன்உப்பு
தேவையான அளவுகறிவேப்பிலை –
சிறிதுஎண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி,

நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து, அதனை இறாலுடன் சேர்த்து, அத்துடன், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிது தூவி, நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு இறாலில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து,

கொதிக்க விட்டு, பின் மிதமான தீயில் 6-8 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் பிரட்டி, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். இறுதியில் உப்பு சுவை பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பிரட்டி இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!
Prawnsfry

Related posts

கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி

nathan

சுவையான கேரளா ஸ்டைல்: இறால் பெப்பர் ப்ரை

nathan

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய…

nathan

சூப்பர் ஆட்டுக்கால் மிளகு குழம்பு : செய்முறைகளுடன்…!

nathan

சூப்பர்” இறால் ப்ரை”

nathan

சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan

வெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )

nathan

கொங்குநாடு சிக்கன் ப்ரை

nathan