பெரும்பாலும் கடலைப்பருப்பை தாளிக்க மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த கடலைப் பருப்பைக் கொண்டும் அருமையாக குழம்பு செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், கடலைப்பருப்புடன் தேங்காய் சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
இங்கு அந்த கடலைப்பருப்பு தேங்காய் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
Chana Dal Coconut Curry Recipe
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 2 கப் (நீரில் ஊற வைத்தது)
வரமிளகாய் – 2
பிரியாணி இலை – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வரமிளகாய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு சீரக பொடி சேர்த்து கிளறி, பின் துருவிய தேங்காய் சேர்த்து, குறைவான தீயில் 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, பின் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் கரம் மசாலா மேற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு ரெடி!!!