24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 613950c9
சைவம்

வெண்டைக்காய் பொரியலை ஒரு முறை இப்படி செய்து பாருங்க…

வெண்டைக்காய் ஃப்ரை இப்படி ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் இதே போல செய்து சாப்பிட தோன்றும்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – அரை கிலோ
சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு
கடுகு – கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன்
மல்லி தூள் – அரை டீஸ்பூன்
சீரகத் தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
வறுத்த வேர்க்கடலை – கால் கப்
உப்பு – தேவையான அளவிற்கு

செய்முறை

முதலில் வெண்டைக்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெண்டைக்காய்களை அப்படியே காற்றில் ஐந்து நிமிடம் ஆறவிட்டு விடுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் வெட்டி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.

ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு வெண்டைக்காயை கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு விட்டு கிண்டி கொண்டே இருந்தால் போதும் சீக்கிரமாக வெந்து விடும். வெண்டைக்காய் சமைக்கும் போது மூடி வைத்து சமைக்க கூடாது. பாதி அளவிற்கு வெந்த பிறகு தேவைப்பட்டால் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மிக்ஸி ஜாரில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் மற்றும் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள், கால் கப் அளவிற்கு வறுத்த வேர்க்கடலை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மசாலா வெண்டைக்காய்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இந்த மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அதிலிருக்கும் மசாலா வாசம் போனதும் அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டியது தான். இந்த வெண்டைக்காய் மசாலா ஃப்ரை சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

மேலும் சாதத்துடன் கலந்து கலவை சாதம் ஆகவும் செய்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் இப்படி வெண்டைக்காய் ஃப்ரை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ஒருமுறை வீட்டில் முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

Related posts

பாகற்காய் பொரியல்

nathan

சிம்பிளான… காளான் கிரேவி

nathan

சுவையான காளான் டிக்கா

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

nathan

சேப்பங்கிழங்கு ப்ரை

nathan

பாலக் கிச்சடி

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan