28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
15 soya chunks
சிற்றுண்டி வகைகள்

மீல் மேக்கர் கட்லெட்

கட்லெட்டில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சோயாவினால் செய்யப்பட்ட மீல் மேக்கரைக் கொண்டு செய்யப்படும் கட்லெட். இந்த கட்லெட் உண்மையிலேயே சுவையுடன் இருப்பதோடு, செய்வது மிகவும் ஈஸி. மேலும் இதில் எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாமல் செய்வதால், இது ஆரோக்கியமானதும் கூட.

சரி, இப்போது அந்த மீல் மேக்கர் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 கப் (வேக வைத்து மசித்தது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
ஓட்ஸ் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 1 விசில் விட்டு இறக்கி, 2 முறை நீரில் நன்கு அலசி, அதில் உள்ள நீரை பிழிந்து, அதனை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, மீல் மேக்கர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து, 3 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைத்து, பின அதனை கட்லெட் வடிவத்தில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை பிரட் தூள் மற்றும் ஓட்ஸ் பொடியில் பிரட்டி போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், மீல் மேக்கர் கட்லெட் ரெடி!!!

Related posts

வெஜிடபிள் பாட் பை

nathan

இனிப்புச்சீடை

nathan

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

nathan

மசால் தோசை

nathan

மட்டன் கபாப்

nathan

இஞ்சி துவையல்!

nathan

ஜவ்வரிசி தோசை

nathan

இட்லி 65

nathan

கோதுமை உசிலி

nathan