23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 6137102a
சமையல் குறிப்புகள்அசைவ வகைகள்

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.

தேவையான பொருட்கள்
இறால் – 100 கிராம்
முட்டை – 2
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம். இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

Related posts

சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை

nathan

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

nathan

ஓட்ஸ் தோசை

nathan

மட்டன் பிரியாணி ! பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்

nathan

வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

சுவையான நட்ஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சுவையான… தக்காளி சாம்பார்

nathan

சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

nathan

சுவையான பூண்டு ரசம்

nathan