28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
greentea 2 600
மருத்துவ குறிப்பு

உங்க தொப்பையோட ஒரே போராட்டமா இருக்கா? இதோ சில வழிகள்!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக இருப்பது தொப்பை. இந்த தொப்பை வருவதற்கு வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக உள்ளது. அதில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, கண்ட கண்ட தின்பண்டங்களை நொறுக்குவது போன்றவை முக்கியமானவையாகவும், முதன்மையானவையாகவும் உள்ளது. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி சரியான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சியை செய்து வந்தால், நிச்சயம் வயிற்றைச் சுற்றியுள்ள டயரையும், தொப்பையையும் குறைக்கலாம்.

உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? அதனால் நிறைய அவஸ்தைப்படுகிறீர்களா? பலர் உங்களைப் பார்த்து அங்கிள் என்று சொல்கிறார்களா? அப்படியெனில் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள தொப்பையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வாருங்கள். இவற்றால் நிச்சயம் தொப்பையையும், வயிற்றைக் சுற்றியுள்ள டயரையும் குறைக்கலாம்.

க்ரீன் டீ

தினமும் 1-2 கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள EGCG என்னும் பொருள் வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை கரைத்து, தொப்பையை சுருக்கி, நாளடைவில் தட்டையான வயிற்றைப் பெற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை பொலிவோடும் வைத்துக் கொள்ளும்.

ஒமேகா-3 உணவுகள்

ஆய்வு ஒன்றில், டயட்டில் அதிக அளவு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளும், குறைந்த அளவு ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்டுகளும் இருந்தால், வீக்கத்தின் அளவு குறைவதாக தெரிந்துள்ளது. எனவே உங்கள் வயிற்று வீக்கத்தைக் குறைக்க ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் நிறைந்த உணவுகளான வால்நட்ஸ், ஆளி விதை மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் வீங்கியிருக்கும் தொப்பையின் அளவை குறைக்கலாம்.

பூண்டு

பூண்டில் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம், கொழுப்புக்களை கரைப்பதற்கு தேவையான அளவு எனர்ஜி உடலுக்கு கிடைத்து, இதனால் தொப்பை குறையும். முக்கியமாக பூண்டில் தெர்மோஜெனிக் என்னும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

புதினா

ஒரு கப் சுடு தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் சிறிது புதினா இலைகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும்.

பட்டை

உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு பட்டை பெரிதும் உதவியாக இருக்கும். எனவே சுடுநீரில் 1/2 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியை சேர்த்து 5 நிமிடம் கழித்து, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வடிகட்டி குடிக்க வேண்டும். அதிலும் இந்த கலவையை காலையில் சாப்பிடுவதற்கு முன் மற்றம் இரவில் தூங்க செல்லும் முன் குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், விரைவில் தொப்பையைக் குறைக்கலாம்.

தர்பூசணி

தர்பூசணியில் 82 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது. மேலும் இதில் வைட்டமின சி இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. எனவே தொப்பையைக் குறைக்க நினைத்தால், தர்பூசணியை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் சாப்பிட்டால், பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் மற்றும் வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து தொப்பையையும் குறைக்கலாம். ஆப்பிளில் பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் இருப்பதால், அவை வயிற்றை விரைவில் நிறைத்துவிடும். அதற்கு ஆப்பிளை காலை உணவாக எடுத்து வருவது மிகவும் நல்லது.

வாழைப்பழம்

ஆப்பிளைப் போன்றே வாழைப்பழத்திலும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொள்வதாலும் வயிறு விரைவில் நிரம்பி, கண்ட கண்ட உணவுகளின் மீது நாட்டத்தை குறைக்கும். மேலும் வாழைப்பழம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கக்கூடியதால், வயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

Related posts

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில்

nathan

வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியை பயன்படுத்த வழி உண்டா?

nathan

சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

nathan

ஆய்வு கட்டுரை ! கொரோனா அறிகுறிகள் எல்லாம் இருந்தும் பரிசோதனையில் “நெகட்டிவ்” வருவது ஏன்?

nathan

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களது ரத்த பிரிவு என்ன?… உடல் எடையைக் குறைக்க இந்த மாதிரியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

nathan

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

nathan

இதய இயக்கத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க!

nathan