இந்த காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. 30 வயதை தாண்டினாலே முதலில் பாதிக்கப்படும் நோயாக சர்க்கரை நோய் மாறி இருக்கிறது.
நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ருசியான உணவை தேடி ஆரோக்கியமான உணவை இழந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
நம் சமையறையில் இருக்கும் பொருட்களை கொண்டே பல நோய்களை விரட்டி அடித்து விடலாம். குறிப்பாக வெந்தயத்தில் பல நன்மைகள் உள்ளது. சரி வாங்க வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி நீரிழிவு நோயில் இருந்து வெளியே வருவது குறித்து பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு வெந்தயம் சேர்த்து அதில் வெந்நீரை ஊற்றி கிட்டத்தட்ட 10 நிமிடம் நன்றாக ஊறவைக்கவும். சுவைக்கு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை கலந்து கொண்டு வடிகட்டி சூடான தேனீராக பருகலாம்.
நன்மைகள்:-
வெந்தயத்தில் உள்ள நார் சத்துக்கள் இயற்கையாகவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவையே ஈஸியாக சமாளிக்க முடியும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது 8வது மாதத்தில் இருந்து தினமும் வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் சுக பிரசவம் நடக்கும். அதுமட்டும் இல்லாமல் இது கருப்பை சுருங்காமல் காக்கின்றது.
சில சமயங்களில் வெந்தயக்கீரையை மாவாக அரைத்து கொண்டு துணியில் மூட்டை கட்டி நெருப்பில் சூடு செய்து தோலில் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறு செய்வதால் உடல் வலி, தசை வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
வெந்தய விதைகளை வெறும் வயிற்றில் தினமும் உட்கொள்வது மூலம் முக சுருக்கங்கள், கரும் புள்ளிகள் போன்றவையே தடுக்கலாம்.