29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 hiccup
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்….

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள். அதையெல்லாம் சமாளிக்க நாம் படும் பாடு இருக்கே, சொல்லி தீராது. வாழ்க்கையையே மாற்றும் அளவிற்கு பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வரும் வேளையில், சின்ன சின்ன பிரச்சனைகளை அன்றாடம் நாம் சந்தித்து வருவது இயல்பே. அதிலும் சில பிரச்சனைகள் நமக்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்திவிடும். சரி, யாரால் இந்த பிரச்சனை என உங்களுக்கு தெரியுமா? வேறு யாராலும் இல்ல உங்களாலேயே தான். உங்கள் உடலே உங்களுக்கு எதிரியாக மாறி பல பேரின் முன்னிலையில் உங்களை அசிங்கப்படுத்தினால் எப்படி இருக்கும்?

புரியவில்லையா? என்றாவது நீங்கள் உங்கள் அலுவலக கூட்டத்தில் ஏப்பத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளீர்களா? முக்கியமான தொலைப்பேசி உரையாடலின் போது நடுவே விக்கல் வந்து விட்டதால் அவதிப்பட்டு இருக்கிறீர்களா?

சருமத்தில் ஏற்படும் அரிப்பு, நாற்றம் முதல் செரிமான ஆரோக்கியம் வரை நம் உடல் முழுவதும் பல அதிசயங்கள் ஒளிந்திருக்கிறது. இதில் என்ன பெரிய பிரச்சனை என்றால் அவையெல்லாம் நமக்கு வேண்டாத அதிசயங்கள் ஆகும். இதனால் ஏற்படும் விளைவு: மிக மோசமான தர்மசங்கடம். பொது இடத்தில் இப்படிப்பட்ட தர்மசங்கடத்தை தவிர்க்க உங்களுக்காக நாங்கள் சில டிப்ஸ்களை கூற போகிறோம். இதனால் எரிச்சலை உண்டாக்கும் உடல் பிரச்சனைகளை கையாள நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். அதேப்போல் இந்த பிரச்சனை நீங்கவில்லை என்றால் மருத்துவ ரீதியாக உதவியையும் தேவைப்படும் நேரத்தில் நாடிடுவீர்கள்.

அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி

உடலில் முடி இருப்பது பொதுவான ஒன்றே. ஆனால் நீங்கள் பெண்ணாக இருந்து (சில நேரங்களில் ஆண்கள் உட்பட), உங்கள் முகத்தில் அல்லது நெஞ்சில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்தால், கண்டிப்பாக அது வருந்தக்கூடிய ஒரு விஷயமே. இதற்கு காரணம் ஆண்ட்ரோஜென்ஸ் என்ற ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதனால்.

என்ன செய்வது – மருத்துவ உதவியை நாடிடுங்கள். சுயமாக ஈடுபடும் நடவடிக்கை நிலைமையை மோசமடையத் தான் செய்யும். உங்கள் மருத்துவர் சில சிகிச்சை அல்லது மருந்துகளை பரிந்துரைப்பார். அல்லது முடியை நீக்கும் ஏதேனும் சிகிச்சையை பரிந்துரைப்பார்.

விக்கல்

நாம் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான் திடீர் விக்கல். தனது விருப்பமில்லாமல் உதரவிதானம் சுருங்க தொடங்கும் போது விக்கல் ஏற்படும்.

என்ன செய்வது – உங்கள் உதரவிதானத்தை அமைதியுறச் செய்து, ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அல்லது சில நொடிகளுக்கு மூச்சை இழுத்து பிடித்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக மூச்சு விட தொடங்கவும்.

உலர்ந்த வாய்

வாயில் எச்சில் உற்பத்தி குறைவாக இருந்தால், வாய் உலர்ந்து போகும். பிறரிடம் பேசும் போது இந்த நிலை ஏற்பட்டால் எரிச்சலாக இருக்கும்.

என்ன செய்வது – தண்ணீர் குடிப்பதை அதிகரியுங்கள். சர்க்கரை இல்லாத மிட்டாய் அல்லது சூயிங் கம்மை உண்ணுங்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் குறைத்துக் கொள்ளுங்கள். அதே போல் காஃப்பைன் உட்கொள்ளும் அளவையும் குறைக்கவும். மேற்கூறிய எதுவுமே வேலை செய்யவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.

தும்மல்

தொடர்ச்சியான தும்மலை போன்ற ஒரு எரிச்சல் மிக்க விஷயம் எதுவும் இருக்க முடியாது. அதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். அலர்ஜியாக இருக்கலாம் அல்லது வைரல் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

என்ன செய்வது – அலர்ஜியால் தும்மல் ஏற்பட்டால், எதனால் அலர்ஜி வருகிறது என்பதை கண்டுப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள்.

பொடுகு

வெள்ளை நிறத்தில் உதிரும் பொடுகு நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான எரிச்சல் தரும் பிரச்சனையாகும். பொடுகு தொல்லை இருப்பதால் உங்களுக்கு பிடிக்காத கருப்பு நிற ஆடைகளை அணிய முடியவில்லை என்றால் எரிச்சல் வரும் தானே. பின்ன, கருப்பு ஆடையில் வெள்ளை நிற பொடுகு தெளிவாக தெரியாதா என்ன?

என்ன செய்வது – எலுமிச்சை சாறு அல்லது தேங்காய் எண்ணெய்யை அல்லது ஆலிவ் எண்ணெய்யை முடியை அலசுவதற்கு முன்பு தடவவும். தலை முடியை நல்லதொரு ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்புவை கொண்டு சீரான முறையில் அலசவும். இருப்பினும் கடுமையான பொடுகு இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.

அளவுக்கு அதிகமாக வியர்த்தல்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஒரு இயற்கையான வழி தான் வியர்ப்பது. இது பல்வேறு வியர்வை சுரப்பிகளுடன் ஒன்றாக இனைந்து நம்மை குளிச்சியாக வைத்திருக்கும். ஆனால் இந்த வியர்வை சுரப்பி மிக அதிகமாக இருந்தால், வியர்வையும் அதிகரிக்கும். இது சற்று எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக இண்டர்வ்யூ அல்லது சந்திப்பு போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு செல்லும் போது எரிச்சல் அதிகரிக்கும்.

என்ன செய்வது – அளவுக்கு அதிகமாக வியர்ப்பதை தடுக்க வேண்டுமானால், இயர்க்கும் அந்த உடல் பகுதியை பேக்கிங் சோடா மற்றும் சோள வடிநீர் கலவையில் ஊற விடவும். அப்படி இல்லையென்றால் மருத்துவ உதவியை நாடவும்.

சுவாச துர்நாற்றம்

நாம் யாருடனாவது பேசும் போது பெரிய இடையூறாக இருப்பது சுவாச துர்நாற்றம். அது சமுதாயத்தோடு பழகுவதை பெருமளவில் பாதிக்கும். வாயின் ஆரோக்கியம் அல்லது ஜங்க் உணவுகளை உண்ணுவதால் இந்த நிலை ஏற்படலாம்.

என்ன செய்வது – வாய் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கவும்; பற்களை தினமும் இரண்டு முறை துலக்கவும்.; உணவருந்திய பிறகு மவுத் வாஷ் பயன்படுத்துங்கள். கம்ஸ் அல்லது புதினா மிட்டாய்களை உண்ணுங்கள். அப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.

வாடையடிக்கும் பாதம்

நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்திருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படும். அதற்கு காரணம் பாதத்தில் உண்டாகும் வியர்வை சாக்ஸ் மற்றும் ஷூவில் தேங்கும். இதனால் பாதம் வாடையடிக்கும். பொது இடத்தில் சாக்ஸை கழற்றும் போது இந்த நாற்றம் அனைவரையும் ஓட வைக்கும். சில நேரங்களில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஷூவை கழற்றவில்லை என்றாலும் கூட வாடை அருகில் உள்ளவர்களை சென்றடையும்.

என்ன செய்வது – சிந்தடிக் சாக்ஸ் அணியாதீர்கள். மாறாக, வியர்வையை உறிஞ்சும் சாக்ஸை பயன்படுத்துங்கள். உங்கள் பாதங்களை சீரான முறையில் கழுவுங்கள். வியர்க்காமல் இருப்பதற்கான ஸ்ப்ரேக்களை பாதங்களில் பயன்படுத்துங்கள். சாக்ஸ் போடுவதற்கு முன்பு இதனை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் செருப்பை பயன்படுத்துங்கள்.

பருக்கள்

வயசு பசங்க மற்றும் பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனையே பருக்கள் தான். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உண்ணுவதால் இது ஏற்படும்.

என்ன செய்வது – பேஷியல் செய்யுங்கள், சீரான முறையில் முகத்தை துடையுங்கள், செத்த தோலை நீக்குங்கள், பருக்களை எப்போதும் உடைத்து விடாதீர்கள், எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்க்கவும். அப்படியும் இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

வியர்வை நாற்றம்

வெயிலில் நீண்ட நேரம் நடந்த பிறகு அல்லது உடற்பயிற்சி செய்யும் போது வியர்ப்பது இயற்கையே. ஆனால் இந்த வியர்வை நாற்றத்தை உண்டாக்கினால் அது தர்மசங்கடத்தை உண்டாக்கி விடும்.

என்ன செய்வது – அதிகமாக தண்ணீர் குடியுங்கள், வியர்வை வராமல் தடுக்கும் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். உடலுக்கு பவுடர் போடுங்கள் அல்லது பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

வெடித்த உதடுகள்

உங்கள் அழகிய முகத்தை வெடித்த உதடுகள் கெடுத்து விடும். வறண்ட காற்று, வெயிலில் அல்லது மிக குளிர்ந்த வெப்பநிலையில் தென்படுவது ஆகியவைகளால் இது ஏற்படலாம்.

என்ன செய்வது – உதட்டை சப்புவதால் நிலைமை மோசமடைய தான் செய்யும். நல்லதொரு உதட்டு தைலத்தை தடவினால் வெடித்த உதடுகள் ஆறும்.

பற்களில் கறைகள்

முத்து போன்ற பற்களை கொண்டு சிரிக்கும் போது, உங்கள் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக பானங்கள் மற்றும் ஜங்க் பானங்கள் குடித்தால், முத்து போன்ற பற்களில் கறைகள் வந்து சேரும்.

என்ன செய்வது – பாலிஷ் செய்யும் டூட் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். அல்லது ஸ்ட்ராபெர்ரி/பேக்கிங் சோடா கொண்டு பற்களை துலக்கவும். உணவருந்திய பிறகு மவுத் வாஷ் பயன்படுத்தவும். அல்லது மருத்துவரின் ஆலோசனை படி பற்களை பராமரிக்கவும்.

வாயு வெளியேற்றுதல்

வயிற்றில் வாயுவை வைத்திருக்க முடியாத போது, வாடை அடிக்கும் வாயுவாக அது வெளியேறும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவில்லை என்றால், இது பொதுவாக ஏற்படும்.

என்ன செய்வது – உணவை நன்றாக மென்று உண்ணுங்கள். பச்சை பூக்கோசு, காலிஃப்ளவர், பீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்க்கவும். சரியான உணவை சரியான நேரத்தில் உண்ணுங்கள்.

Related posts

பசியின்மையை நீங்கும் இலந்தை

nathan

அடிக்கடி ‘சுச்சூ’ வருதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படும் மாசிக்காய்

nathan

கருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..!

nathan

உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க… சூப்பர் டிப்ஸ்

nathan

நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

nathan

பெண்களுக்கு மல ட்டுத் தன்மை ஏற்படுவது ஏன்? ஆய்வில் அதி ர்ச்சி தகவல்!

nathan

மூட்டுவலியால் அவதியா? வைக்கலாம் முற்றுப்புள்ளி?

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத நாட்டு மருந்து!

nathan