உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை எதுவும் இந்த வகை சருமத்தினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* சரும அலர்ஜிக்குத் தண்ணீர்தான் சிறந்த மருந்து. நிறையத் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஒவ்வாமையைப் போக்கும்.
* குளிர்ந்த நீரில் குளித்தால்தான், அலர்ஜி உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.
* தனியாகத் துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜி வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.
* ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், பன்னீர் கலந்து பூசிக்கொள்வதன் மூலம் அலர்ஜி நெருங்காது.
* ஒவ்வாமை ஏற்படும் இடத்தில், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.
* வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, உடலில் தடவி, பிறகு குளிக்கலாம்.
Courtesy: MalaiMalar