24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
thulasi 002
மருத்துவ குறிப்பு

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
எனவே தினந்தோறும் ஒரு சிறு துண்டு துளசி இலையை வாயில் போட்டு மென்றால் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம்.

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள்.

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
thulasi 002

Related posts

காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய இயற்கை மருத்துவம்

nathan

கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்

nathan

வயோதிகத்தின் வாசல் கண்களை கவனியுங்கள்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்:

nathan

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்

nathan

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் குங்குமப் பூ!

nathan

முதுகு வலி, இடுப்பு வலி இன்றி, இனி நிம்மதியாக வேலை செய்யலாம்!!!

nathan

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan