24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
சப்பாத்தி
சமையல் குறிப்புகள்

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. பெரும்பாலும் இரவு உணவுக்கு எல்லோரின் விருப்பம் சப்பாத்தியாக இருக்கிறது.

ஆனால் சப்பாத்தி சூட இருக்கும்போது மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். ஆறிவிட்டால் ரப்பர் போன்றதாகிவிடுகிறது.

இதனாலேயே பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி சாப்பிட ஆசையிருந்தும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் உங்களுக்கு சாஃப்ட் சப்பாத்தி செய்யும் ரகசியம் தெரிந்தால், நீங்களும் தினமும் சப்பாத்தி செய்து சுவைக்கலாம்.

இந்த ரகசியம் எளிமையானது மற்றும் நீங்கள் கஷ்டப்பட்டு மாவு பிசைய வேண்டிய அவசியமும் இல்லை. வாருங்கள், மிருவான சப்பாத்தி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். 

  1.   சாஃப்ட்டாக சப்பாத்தி செய்ய நல்ல தரமான கோதுமை மாவு மிகவும் முக்கியம். தரமான மாவு இல்லையெனில், சப்பாத்தி சரியாகவும், சுவையாகவும் இருக்காது.
  2. நீங்கள் வீட்டில் அரைத்த மாவோ அல்லது கடையில் வாங்கிய மாவோ ஒருமுறை சலித்து வைத்து பயன்படுத்துவது நல்லது.
  3. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், தேவையான அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. இப்போது நாம் சேர்க்கப்போகும் இந்த இரண்டு பொருட்கள் தான் சாஃப்ட் சப்பாத்திக்கான சீக்ரெட். மாவுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்துக் கொள்ளுங்கள்.
  5. பின்னர் இதனுடன், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து மாவு பிசைவதால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும்.
  6. உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, மாவு பிசையும்போது சேர்த்துக் கொள்ளலாம்.
  7. இவ்வாறு செய்தால், மாவு பிசைந்து எவ்வளவு நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதோடு, சுவையாகவும் இருக்கும்.
  8. இப்போது சப்பாத்தி மாவு பிசையும் பக்குவத்தைப் பார்ப்போம். சப்பாத்தி சாஃப்ட்டாக வர சரியான பக்குவத்தில் மாவு பிசைவது மிக முக்கியம். மாவில் எவ்வளவு தண்ணீர் ஊற்றி பிசைகிறோம் என்பதில் தான் மெதுமெதுவான சப்பாத்தியின் ரகசியம் இருக்கிறது.
  9. இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, சூடான நீரை மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து, கரண்டி மூலம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  10. அதாவது கொழுக்கட்டைக்கு மாவு பிசைவது போல் செய்ய வேண்டும். சூடான நீர் சேர்த்து கலக்குவதால் மாவின் கெட்டித்தன்மை இலகுவாகி மிருவான சப்பாத்தி கிடைக்கும்.
  11. சூடு சற்றி ஆறி, கைகளால் கிளற முடியும் அளவுக்கு வந்தவுடன், கைகளால் மாவை நன்றாக பிசைய வேண்டும். பின்னர் சிறிது நேரத்திற்கு மாவை மாற்றி மாற்றி உருட்டி பாத்திரத்தில் அடித்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
  12. இதனால் கைகளால் அதிக நேரம் பிசைய வேண்டிய அவசியமில்லை. மாவு பக்குவத்திற்கு வந்த பின் எண்ணெய் தடவி, ஈரத்துணிக் கொண்டு மூடிவைக்க வேண்டும்.
  13. அரை மணி நேரத்திற்கு பிறகு எடுத்து சப்பாத்தி செய்து பாருங்கள், உங்களுக்கு மிருவான சப்பாத்தி கிடைக்கும். சாஃப்ட் சப்பாத்தி ரகசியம் அவ்வளவு தான்! நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

Related posts

முட்டை பொடிமாஸ்

nathan

சுவையான இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்

nathan

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… ஜீரண சக்தி அதிகரிக்கும்!…

sangika

பக்கோடா செய்வது எப்படி?

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் காளான்

nathan

ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு

nathan

சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான காலிஃப்ளவர் பட்டாணி குழம்பு ……

sangika

சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan