25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1448351827 4576
சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய போண்டா தினை – சோளம்

சிறுதானியமான தினை, சோளம் இவற்றில் தயாரிக்கபடும் போண்டா மிகவும் சுவைமிகுந்தது.

கிராமப்புறங்களில் அதிகபடியாக சிறுதானியங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை நகரங்களிலும் உணர்ந்து.

தேவையான பொருட்கள்:

தினை மாவு – அரை கப், சோள மாவு – அரை கப். உருளைக்கிழங்கு – 3, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – அரை தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது), மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை – ஒரு கீற்று, கடுகு – சிறிதளவு, உளுத்தம் பருப்பு -1/2 தேக்கண்டி, மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி, உப்பு, சமையல் எண்ணெய் – தெவையான அளவு.

தயார் நிலையில் வைத்து கொள்ளவேண்டியவை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சத்தூள், கொத்தமல்லி போட்டு நன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

செய்முறை:

தினை மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்பசோடா இவற்றுடன் நீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு
கரைத்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, தினை – சோளமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.

சுவை மிகுந்த சூப்பரான தினை – சோளம் சிறுதானிய போண்டா தயாராகிவிட்டது.

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்திடலாம்.
1448351827 4576

Related posts

அச்சு முறுக்கு

nathan

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

சத்தான திணை கார பொங்கல்

nathan

வெஜிடபிள் ஆக்ரட்டின்

nathan

மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

பூரி செய்வது எப்படி

nathan

ஆரோக்கியமான சாமை அரிசி புலாவ்

nathan

சோயா தட்டை

nathan