23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pimples 1
முகப் பராமரிப்பு

கருவளையம், சரும கருமை போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் ஒவ்வொரு விதமான சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறோம். இப்படி சந்திக்கும் சரும பிரச்சனைகள் ஒவ்வொன்றிற்கும் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்த அனைவரிடமும் பணம் இருக்காது. அப்படி பணம் இருந்து வாங்கினாலும், கெமிக்கல் கலந்த அந்த பொருட்களால் சரும பிரச்சனைகள் தற்காலிகமாக சரியாகுமே தவிர, நிரந்தரமாக அல்ல.

மேலும் கெமிக்கல் கலந்த பொருட்களால் சரும செல்கள் ஆரோக்கியத்தை இழந்து, ஒரு சரும பிரச்சனை போய் வேறொரு சரும பிரச்சனையால் கஷ்டப்படக்கூடும். இந்த தொல்லைக்கு தான் நம் முன்னோர்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்கள். அதுவும் நாம் சந்திக்கும் முகப்பரு, கரும்புள்ளி, சருமத்தில் உள்ள மேடு பள்ளங்கள், கருவளையங்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு சமையலறை பொருட்களைக் கொண்டே தீர்வு காணலாம்.

இப்படி சமையலறைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சரும பிரச்சனைகள் நீங்குவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும். உங்களுக்கு எந்த வகையான பிரச்சனைக்கு எந்த பொருளை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

முட்டை வெள்ளைக்கரு – மேடு பள்ளமான சருமம்

முட்டையில் உள்ள புரோட்டீன், சருமத்தை சுத்தம் செய்து, பெரிய சருமத்துளைகளை சுருங்கச் செய்யும்.

எப்படி பயன்படுத்துவது?

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் நனைத்து, பின் அந்த வெள்ளைக்கருவை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், விரிந்த சரும துளைகள் சுருங்கும்.

வெள்ளரிக்காய் – கருவளையம்

வெள்ளரிக்காயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து உள்ளது. இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறையச் செய்யும்.

எப்படி பயன்படுத்துவது?

தினமும் 2 துண்டு வெள்ளரிக்காயை கண்களின் மீது 20-25 நிமிடம் வைத்து எடுத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி ஒருவர் தினமும் வெள்ளரிக்காயை கண்களின் மீது வைத்து வந்தால், கருவளையங்கள் நீங்கி, கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படும்.

உருளைக்கிழங்கு – சரும கருமை

உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தில் உள்ள அதிகளவு கருமையைப் போக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை சருமத்தின் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், கருமை விரைவில் நீங்கும்.

பேக்கிங் சோடா – பொலிவிழந்த முகம்

பேக்கிங் சோடா சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் நீரில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

தக்காளி – வெயிலால் கருமையான சருமம்

வெயிலில் அதிகம் சுற்றி உங்கள் சருமம் கருமையாகிவிட்டதா? அப்படியானால், தக்காளியைப் பயன்படுத்துங்கள். இதில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

நற்பதமான தக்காளியை அரைத்து, முகம், கை, கால்களில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்யுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள் – முகப்பரு

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சள் பழங்காலம் முதலாக அழகு பராமரிப்புப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒருவர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு – எண்ணெய் பசை சருமம்

கடலை மாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி எடுத்து, சருமத்தை அதிக எண்ணெய் பசையின்றி வைத்துக் கொள்ளும்.

எப்படி பயன்படுத்துவது?

ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் ஃபேஷ் வாஸ் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

மயோனைஸ் – பிரகாசமான சருமம்

மயோனைஸில், முட்டை மற்றும் பாலைப் போன்றே புரோட்டீன் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு ஊட்டம் அளித்து, பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகத்தை பளிச்சென்று பிரகாசமாக காட்டும்.

எப்படி பயன்படுத்துவது?

சிறிது மயோனைஸை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் நனைத்துக் கொள்ளவும். அதன் பின் இந்த மயோனைஸை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல் – பருக்களால் வந்த தழும்புகள்

கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸடன்ட்டுகள், முகத்தில் பருக்களால் வந்த அசிங்கமான தழும்புகளை மறையச் செய்யும். அதுவும் இது மிகவும் குறைந்த காலத்தில் விரைவில் தழும்புகளை மறைக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

நற்பதமான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழம் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று செயல்படும் மற்றும் இது சருமத்தை வறட்சியடையாமல் மென்மையாக வைத்துக் கொள்ளும்.

எப்படி பயன்படுத்துவது?

நன்கு கனிந்த வாழைப்பழத்தை ஒரு பௌலில் போட்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

Related posts

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா?இதை படியுங்கள்…

nathan

வாய்ப்பகுதியை சுற்றியிருக்கும் கருமையை எப்படி போக்கலாம்?

nathan

குண்டு கன்னங்கள் உங்களை பருமனா காண்பிக்குதா? உங்களுக்கு சில டிப்ஸ்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை பெற உங்களுக்கு இந்த ஒரு பொருள் போதுமாம்…!

nathan

முகம் வசீகரமாக இருக்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பழத்தை இப்படி முகத்தில் பயன்படுத்துங்க, பருக்கள் எல்லாம் காணாமல் போய் விடும்..!

nathan

கண்களுக்குக் கீழ் வீக்கம்… தடுக்க 7 எளிய வழிமுறைகள்!

nathan

உங்களுக்கு அடர்த்தியான புருவம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan