29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
12 pregnant 1518284603
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப கால நீரிழிவு பற்றி உண்மைகள்?

கருவுற்ற காலம் என்பது பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் தரக் கூடிய தருணங்கள். குழந்தை உருவானதிலிருந்து அது பிறக்கும் வரை ஒரு தாய் படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை எனலாம். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தாயின் கனவாகவும் இருக்கும்.

இந்த மாதிரியான சமயத்தில் ஒவ்வொரு பெண்ணும் நிறைய உடல் பிரச்சினைகளோடு போராடித் தான் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அவற்றுள் ஒன்று தான் இந்த கர்ப்ப கால நீரிழிவு என்பது.

இந்த வகை நீரிழிவு குறிப்பாக இந்தியப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. நகர்ப்புற பெண்களே இதில் அதிகம் பாதிப்படைகின்றனர். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளலாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

குழந்தை பிறந்ததும் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்றாலும் கருவுற்ற காலத்தில் கவனமாக இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைக்கும் நன்மை அளிக்கும். இந்த கர்ப்ப கால நீரிழிவு பற்றியும், அதன் அறிகுறிகள் பற்றியும் இக்கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தாமதமான அறிகுறிகள் கர்ப்ப கால நீரிழிவு இருந்தால் கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படும். சோர்வு, தாகம் அதிகரித்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை சாதாரண கர்ப்ப கால அறிகுறிகளாக இருந்தாலும் சரியான பரிசோதனையை மேற்கொள்வது தாயுக்கும் குழந்தைக்கும் நல்லது.

நோயை கண்டறிதல் உங்களுக்கு அறிகுறிகள் தெளிவாக தெரியாவிட்டால் பரிசோதனை மேற்கொண்டு கர்ப்ப கால நீரிழிவு நோயை கண்டறிந்து கொள்ளுங்கள். கருவுற்ற பெண்ணின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறிய ப்ரீநாட்டல் ஓரல் டெஸ்ட் மற்றும் ஏராளமான பரிசோதனைகள் உள்ளன. இதன் மூலம் நீங்களும் உங்கள் குழந்தையும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

உடல் பருத்த குழந்தைகள் தாயின் உடலில் அதிகமான சர்க்கரை இருந்தால் குழந்தையின் உடலும் சர்க்கரையால் ஊறிஞ்சப்பட்டு எடை அதிகரித்து காணப்படும். இந்த நிலைக்கு மேக்ரோஷோமியா என்று பெயர். இந்த மாதிரியான குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் பருத்து அதிக உடல் எடையுடன் காணப்படுவர்.

வாழ்க்கை முறை மாற்றம் கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சினையிலிருந்து குழந்தையையும் அவர்களையும் காத்து கொள்ளலாம். கண்டிப்பாக மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் கூடவே கூடாது. எளிதான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்

அனைத்து கர்ப்ப கால நீரிழிவுக்கும் இன்சுலின் தேவையில்லை கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில பெண்களுக்கு மட்டும் குறைவான அளவு இன்சுலினை ஒரு நாளைக்கு நான்கு முறை என்ற விதத்தில் மாத்திரை மூலம் எடுத்து கொண்டால் போதுமானது.

பிறந்த குழந்தையை பராமரித்தல் கருவுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தை சர்க்கரையால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதன் உடல் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வரும் வரை கவனமாக பராமரிக்க வேண்டும். இந்த மாதிரியான குழந்தைக்கு எப்பொழுதும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. மேலும் பிறந்த பிறகு குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கவனிப்பது நல்லது.

பிறப்பு குறைபாடுகள் கர்ப்ப கால நீரிழிவால் பாதிக்கப்பட்ட தாயின் வயிற்றில் வளரும் குழந்தையை சரியாக கவனிக்காவிட்டால் பிறப்பு குறைபாடுகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. சிறுநீரக குறைபாடு, வாய் பிளவு மற்றும் மூளையில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் எடை இந்த மாதிரியான கர்ப்ப கால நீரிழிவு பொதுவாக கருவுறுவதற்கு முன் அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கும் கருவுற்ற காலத்தில் அதிகப்படியான உடல் எடை காணப்படும் பெண்களுக்கும் ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க கண்டிப்பாக உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் அபாயம் இந்த நீரிழிவு பரம்பரையை சார்ந்து வருவதல்ல. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பெண்களை அதிகளவில் தாக்குகிறது. முதல் பிரசவத்தின் போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அடுத்த பிரசவத்தின் போதும் இந்த நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் அபாயம் இந்த நீரிழிவு பரம்பரையை சார்ந்து வருவதல்ல. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பெண்களை அதிகளவில் தாக்குகிறது. முதல் பிரசவத்தின் போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அடுத்த பிரசவத்தின் போதும் இந்த நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பிறந்த குழந்தைக்கான சிகிச்சைகள் தாய் இந்த நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தால் பிறக்கின்ற குழந்தையின் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது தான் எதிர்காலத்தில் நரம்பு வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்களை சரிசெய்ய முடியும். சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் குழந்தை பிறந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ விரைவாக நரம்புகளின் வழியாக குளுக்கோஸை செலுத்த வேண்டும். குழந்தையின் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நேர்மறை எண்ணங்களோடு இருங்கள் நீங்கள் கர்ப்ப கால நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் எப்பொழுதும் சந்தோஷமாக நேர்மறை எண்ணங்களோடு உங்களை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் சர்க்கரை அளவிற்கும், உங்கள் மன நிலைக்கும் சம்பந்தம் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் எப்பொழுதும் சந்தோஷமான மன நிலையில் இருங்கள். நீங்களும் உங்கள் குழந்தையும் நலமுடன் இருக்கலாம்.

Related posts

பெண்கள் செய்துகொள்ள வேண்டிய வைட்டமின் டி பரிசோதனை -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் கவனத்துக்கு பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்?

nathan

40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்! சூப்பர் டிப்ஸ்…

nathan

பசியை தூண்டும் சீரகம்

nathan

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியன் …

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! கருப்பைத்திசுக்கட்டி வரக்காரணமும்… அறிகுறியும்…

nathan

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்!. திருந்துங்கம்மா!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தூக்கம் மிகவும் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan