29.8 C
Chennai
Thursday, Aug 21, 2025
north
அழகு குறிப்புகள்

தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… வடகொரியா அதிபர் கிம்

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தங்கள் பாணியிலே கொரோனாவை எதிர் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் உலக நாடுகளே கதிகலங்கிக் கொண்டிருந்த போது, தங்கள் நாட்டில் கொரோனா பரவலே இல்லை என்று வடகொரியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், சீனாவிற்கு அருகில் வட்கொரியாவில் எப்படி கொரோனா பரவல் இல்லாமல் இருக்கும், உண்மையை மறைப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், ஐ.நா., சபை தான் ஏற்பாடு செய்துள்ள தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு தடுப்பூசிகளை வழங்க முன்வந்தது. ஆனால் வடகொரியாவோ அதை நிராகரித்துவிட்டது.

தங்களுக்கு தருவதாக இருந்த சீனத் தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை, மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவற்றை மடைமாற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டது. அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ராஜெனிகா மருந்தை வாங்குவதையும் வடகொரியா தாமதப்படுத்தி வருகிறது.

சீனா தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், வேறு தடுப்பூசிக்காக வடகொரியா காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கொரோனா நோய்த் தடுப்பில் நாம் இப்போது பின்பற்றி வரும் நடவடிக்கைகளில் சிறிதளவும் கூட தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தொடர்ந்து தேசிய எல்லைகள் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கு கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். நாம் நமது பாணியிலேயே கொரோனாவைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Related posts

காதலன் வெறிச்செயல்! – கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து

nathan

வெயில் காலத்தில் உச்சி முதல் பாதம் வரை பராமரிப்பு

nathan

திடீரென ஏற்படும் சரும மாற்றங்களை சமாளிப்பது எப்படி?

nathan

சமந்தாவின் திருமண புடவை எங்கே? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

nathan

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை!

nathan

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

nathan

டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும்

nathan