Other News

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

பெண்கள் சுகப்பிரசவத்தை விரும்பினாலும், பல பெண்களுக்கு சிசேரியன் தான் நடைபெறுகிறது. சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள், தங்கள் பழைய உடலமைப்பைப் பெற உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Exercises To Avoid After A C-Section
ஒவ்வொரு பெண்ணின் உடலைப் பொறுத்து 6 அல்லது 12 வாரங்களுக்கு பின் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் கூறுவார்கள். சிசேரியன் பிரசவத்திற்கு பின் நீங்கள் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபட முடிவெடுத்திருந்தால், அவர்கள் குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இக்கட்டுரையில் சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

க்ரஞ்சஸ்

அடிவயிற்றுக்கான க்ரஞ்சஸ் உடற்பயிற்சியின் போது அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிகளவு அழுத்தத்தை சிசேரியனுக்கு பின் அடிவயிற்றில் கொடுத்தால், அதனால் அப்பகுதியில் உள்ள இணைப்புத் திசுக்களில் பாதிப்பு அதிகரித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

ரன்னிங்

ரன்னிங் மூலம் கலோரிகள் அதிகளவு எரிக்கப்படலாம். ஆனால் சிசேரியன் பிரசவத்திறகு பின் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், அது அடிவயிற்று பகுதியில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை மேலும் தீவிரமாக்கும். ஆகவே ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பளு தூக்கும் பயிற்சி

சிசேரியன் செய்த பின் அளவுக்கு அதிகமான பளுவைத் தூக்கும் பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அது உடலில் அழுத்தத்தை அதிகரித்து, உடல் நிலைமையை மோசமாக்கும். எனவே சிசேரியனுக்கு பின் எவ்வளவு பளு தூக்க வேண்டும் என்பதை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து, அந்த அளவு பளுவை மட்டும் தூக்குங்கள்.

ஓவர்ஹெட் பிரஸ்

ஆம், இந்த வகையான உடற்பயிற்சியின் போதும் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படும். இந்த அழுத்தத்தால் காயம் சரியாவது தாமதப்படுத்தப்படும்.

கால்களை தூக்குதல்

கால்களைத் தூக்கும் பயிற்சியை செய்வதாலும், அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, தையல் போடப்பட்ட இடத்தில் உள்ள இணைப்புத் திசுக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும். எனவே இம்மாதிரியான பயிற்சியையும் தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button