28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
30 149612564
மருத்துவ குறிப்பு

குழந்தைக்காக திட்டமிடும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்..!

குழந்தைக்காக திட்டமிடும் முன்னர் கணவன் மனைவி இருவரும் ஒரு சில விஷயங்களை பற்றி சிந்தித்து முடிவெடுப்பது என்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் கூட திருமணம் ஆன உடனேயே சில பெரியவர்கள் இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று நச்சரிப்பது நடந்துகொண்டு தான் இருக்கிறது. மற்றவர்கள் அவசரப்படுத்துவதற்காக நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே இது போன்ற சில திட்டங்களை மனதில் கொண்டு குழந்தைக்காக திட்டமிடுங்கள்.

1. ஊட்டச்சத்து

உங்கள் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால், அதை சரி செய்துகொள்ளுங்கள். ஃபோலிக் அசிட் உள்ள உணவுகளை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்வது குழந்தையின் மூளை சரியாக வேலை செய்ய உதவுகிறது.

2.இரத்த அளவு

தாய்க்கு சரியான அளவு இரத்தம் உடலில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் இரத்த அளவை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறைவாக இருந்தால், அதிகரிக்க சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

3. உடல் எடையில் கவனம்

உங்களது பி.எம்.ஐ அளவை கணக்கிட்டு பார்த்து சரியான உடல் எடையில் இருக்கிறோமா என தெரிந்து கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தல் கூடாது.

4. மனம் மற்றும் உடல்

ஒரு குழந்தையை சுமப்பதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனை, கணவன் மனைவி தகராறு இவற்றை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். இது குழந்தையையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. மாதவிடாய்

உங்களது மாதவிடாய் சரியான இடைவெளியில் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனை என்றால் மகப்பேறு மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

6. தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை கருச்சிதைவு மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே இதனை பரிசோதனை செய்து தீர்வு காணுங்கள்.

7.பொருளாதாரம்

குழந்தை பிறந்த பின் குடும்ப செலவுகள் அதிகரிக்கும். எனவே அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

8. புற்றுநோய் தடுப்பூசி

மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் கர்ப்பவாய் மற்றும் ருபெல்லா புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டியது அவசியம்.

9. உடலுறவு

குழந்தைகளை பற்றிய கவலை இல்லாமல் உடலுறவு கொள்ள இதுவே சரியான தருணம். எனவே உங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.

10. தாமதம் பற்றி கவலை வேண்டாம்

குழந்தைக்காக முயற்சி செய்யும் போது தாமதம் ஆவது இயல்பு. அதற்காக பயம் கொள்ள வேண்டாம். அதிகப்படியான தம்பதிகள் ஒரு வருட முயற்சிக்கு பிறகு தான் கருவுறுகிறார்கள்.

11.குழந்தை பராமரிப்பு

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால், குழந்தையுடன் இருக்க எத்தனை மாதங்கள் விடுமுறை கிடைக்கும் என்பது போன்ற சில விசயங்கள் பற்றி முடிவு எடுங்கள். குழந்தையை பராமரிக்க சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 12 விஷயங்கள்!!!

nathan

சொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்…! இத படிங்க!

nathan

பெண்களே! உங்க அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

மூக்கடைப்பிற்க்கான சித்த மருந்து

nathan

மழை காலத்திற்கான சில ஆயுர்வேத சுகாதாரக் குறிப்புகள்!!!

nathan

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவரா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

nathan

அலர்ஜி… விரட்ட அருமையான வழிகள்!

nathan