முட்டை கிரேவியை பலவாறு செய்யலாம். ஆனால் இப்போது பேச்சுலர்கள் எளிதில் செய்யும் வண்ணம் மிகவும் ஈஸியான முட்டை கிரேவி ரெசிபியைத் தான் பார்க்க போகிறோம். இந்த கிரேவி சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு அந்த முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.
Egg Gravy: Bachelor Recipe
தேவையான பொருட்கள்:
முட்டை – 5-6 (வேக வைத்தது)
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
புளிச்சாறு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் புளிச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, மசாலா முட்டையில் படும்படி நன்கு பிரட்டி இறக்கினால், முட்டை கிரேவி ரெடி!!!