22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 61268aa197
இனிப்பு வகைகள்

கருப்பட்டி புட்டிங் செய்வது எப்படி தெரியுமா?

இதுவரை உங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான எந்த ஒரு ரெசிபியையும் செய்து கொடுத்ததில்லையா? ஆனால் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் கருப்பட்டி புட்டிங் செய்து கொடுங்கள்.

இந்த கருப்பட்டி புட்டிங் செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்

கருப்பட்டி – 2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
தேங்காய் பால் – 2 கப்
அகர் அகர்/கடல் பாசி – 10 கிராம்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை

முதலில் ஒரு பௌலில் கடல் பாசியை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டி முற்றிலும் உருகும் வரை குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள கடல் பாசியை அடுப்பில் உள்ள கருப்பட்டியுடன் சேர்த்து கிளறி, குறைவான தீயில் கடல்பாசியை முற்றிலும் உருக வைத்து இறக்க வேண்டும்.

பிறகு அதை வடிகட்டி குளிர வைக்க வேண்டும்.

அதன் பின் அதில் தேங்காய் பால் மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது ஒரு அகலமான மற்றும் சற்று தட்டையான பாத்திரத்தில் இதை ஊற்றி, ஃப்ரிட்ஜில் செட் ஆகும் வரை வைக்க வேண்டும்.

இறுதியாக ஒரு கத்தியால் துண்டுகளாக வெட்டினால், கருப்பட்டி புட்டிங் தயார்.

Related posts

தொதல் – 50 துண்டுகள்

nathan

ரவா பர்ஃபி

nathan

ஆப்பிள் அல்வா

nathan

குலோப் ஜாமூன் .

nathan

சுவையான மைதா மில்க் பர்பி

nathan

குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா

nathan

காரட்அல்வா /Carrot Halwa

nathan

ஹயக்ரீவ பண்டி

nathan

சத்தான நட்ஸ் லட்டு

nathan