புளிக்குழம்பு என்றாலே கத்திரிக்காய் புளிக்குழம்புக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பின் சுவையோ அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
இங்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து பாருங்கள்.
Ennai Kathrikkai Kuzhambu
தேவையான பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் – 6-7
புளிச்சாறு – 1 1/2 கப்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா பொடிக்கு…
மல்லி – 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 1
எள் – 1/2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 1 பல்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சின்ன கத்திரிக்காயை நீரில் கழுவி, அதனை நான்காக வெட்டி, அதனை நடுவே மசாலா பொடியை திணித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து, கத்திரிக்காய் நன்கு வெந்து சுருங்கும் போது, அதில் புளிச்சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
கத்திரிக்காயானது நன்கு வெந்துவிட்டால், அதில் மீதமுள்ள மசாலா பொடி, சம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
அப்படி கொதிக்கும் போது, குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்தால், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயாராகிவிட்டது என்று அர்த்தம். பின் அதனை இறக்கி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.