25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
27 chettinad potato varuval
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை

அனைவரும் உருளைக்கிழங்கு வறுவலை நிச்சயம் சுவைத்துப் பார்த்திருப்போம். ஆனால் நீங்கள் செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவலை சுவைத்திருக்கிறீர்களா? ஆம், இந்த வறுவலின் ஸ்பெஷல் இதில் சேர்க்கப்படும் மசாலா தான். இங்கு அந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து அவற்றை வீட்டில் செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். சரி, இப்போது செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Chettinad Potato Varuval
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 5
வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1

வறுத்து அரைப்பதற்கு…

மிளகு – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பு சேர்த்து, வேண்டுமானால், சிறிது தண்ணீர் தெளித்து, நன்கு பச்சை வாசனை போக பிரட்டி இறக்கினால், செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!!!

Related posts

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

nathan

வட இந்திய ஸ்டைலில் காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

சிக்கன் செட்டிநாடு

nathan

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

nathan

வெந்தய கார குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

சுவையான செட்டிநாடு வத்த குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்

nathan

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி

nathan