பிரபல திரைப்பட பாடகியான சின்மயி பெண்கள் ஒதுக்கப்படுவது குறித்து ஆவேசமாக பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, பிரபல எழுத்தாளர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன் பின் தான் மீ டூ என்றால் என்ன என்பது பலருக்கும் தெரியவந்தது.
இதனால் பாதிக்கப்படும் பல பெண்களுக்கு சின்மயிக்கு சமூகவலைத்தள பக்கத்தில் குறுந்தகவல் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், சின்மயி தற்போது மாதவிடாய் சுழற்சி காரணமாக பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவது குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
அதில், பல ஆண்டுகளாக பெண் சமூகம் மாதவிடாயை காரணம் காட்டி தீட்டு பட்டதாக கூறி ஒதுக்கி வைக்கப்படுகிறது. மாதவிடாய் ஆகும்போது பெண்களை இங்கே நிற்காதே, அங்கே நிற்காதே, இதன் மீது உட்காராதே, அதன் மீது உட்காராதே என்று பல வகைகளில் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
இது ஒருவகையான தீண்டாமை தான், இது பல ஆண்டுகலாக இருந்து வருகிறது. எத்தனையோ விஷயங்களில் மாறினாலும் மாதவிடாய் விஷயம் இன்னும் மாறவே இல்லை.
அதை ஒரு காரணமக கூறி பெண்களை ஒதுக்கும் அவலம் இன்னும் உள்ளது. இதற்கு காரணம் மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.
அதுமட்டுமின்றி, முதலிரவின் போது சில அறிகுறிகள் தென்படாவிட்டால் இந்த பெண் கன்னித்தன்மை இல்லை என்று கூறப்படுவதுண்டு. முதலில் இது குறித்த விழிப்புணர்வு தேவை. ஒரு பெண் கன்னித்தன்மை குறித்து கூறுவதற்கு எந்த வரையறையும் இல்லை.
ஆனால் இவர்கள் கூறும் கட்டுக்கதைகள் எல்லாம் சகிக்க முடியவில்லை. முதலிரவில் இரத்தம் வந்தால் தான் கன்னித்தன்மை உள்ளவரா? நான் கேட்கிறேன் மொத்தத்தில் நம்மை தள்ளி வைப்பதற்கு இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.