30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
facepack
சரும பராமரிப்பு

இளமையாக பொலிவான சருமம் வேண்டுமா?

இரசாயனப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு மேக்கப் அணிந்து கொள்வதால் மட்டும் அழகாக மாறிவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது தவிர உங்கள் அழகை பராமரிக்க மற்றும் எப்போதும் பொலிவாக இருக்க சில விஷயங்கள் செய்ய வேண்டும். நீங்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பொலிவாக இருக்க முடியும் என்று நினைத்தால் அதுவும் தவறு. வீட்டிற்குள் இருந்தாலும் சில முக்கிய அழகு சார்ந்த குறிப்புகளை கட்டாயம் பின்பற்றுவதால் உங்கள் பொலிவை காப்பாற்றிக் கொள்ள முடியும், இளமையாக இருக்க முடியும்.

கோவிட் 19 நோய்த்தொற்று பாதிப்பின் ஊரடங்கு காலத்தில் நாம் தற்போது இருந்து வருகிறோம். ஆகவே பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அதனால் முகத்திற்கு எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை என்று நினைக்கின்றனர். நீங்கள் வீட்டிலேயே இருந்தாலும், வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மாசும் தூசும் சுற்றுப்புறத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் வீட்டிற்குள் நீங்கள் ஏசி அறையில் இருந்தாலும் இன்னும் உங்கள் சருமம் மோசமடையும்.

பெரும்பாலானவர்கள் தங்கள் முகத்தின் பொலிவை இழக்கும் வகையில் சில பொதுவான தவறுகளை செய்து வருகின்றனர். அவை என்ன மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்று நாம் இந்த பதிவில் காணலாம். இதனை பின்பற்றுவதால் எந்த நேரமும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க முடியும்.

போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது

சரும ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும் போது அதனை உங்கள் முகம் வெளிப்படுத்தும். உங்கள் சருமம் இளமையுடன் பொலிவாக ஜொலிக்க தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் பருகுவது அவசியம். இப்படி தினமும் அதிகமான தண்ணீர் பருகுவதால் முகத்தில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து சருமம் பொலிவாக காணப்படும்.

அடிக்கடி முகத்தை கழுவாமல் இருப்பது

வீட்டிலேயே இருப்பதால் முகத்தை ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே கழுவினால் போதும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இது கோடை காலம். அதிக வெப்பம் காரணமாக வியர்வை வெளியேறும். வியர்வையுடன் அழுக்கும் சேர்ந்து உங்கள் முகத்தின் துளைகளுக்குள் அடைத்துக் கொள்ள நேரிடலாம். ஆகவே உங்கள் முகத்தை எப்போதும் சுத்தமாக புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வது அவசியம். தினமும் இரண்டு முறை முகத்தைக் கழுவுங்கள். நீங்கள் சோர்வாக அல்லது வெப்பமாக உணரும் போது அவ்வப்போது முகத்தில் தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள். இதனால் அதிக எண்ணெய், வியர்வை மற்றும் கிருமிகள் இல்லாமல் முகம் பளிச்சென்று காணப்படும். மேலும் பருக்கள் மற்றும் கட்டிகள் தோன்றாமல் இருக்கும்.

அழகு பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றாமல் இருப்பது

எது எப்படி இருந்தாலும் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி மிகவும் அவசியம். நீங்கள் வீட்டில் இருந்தாலும் சில அழகு பராமரிப்பு குறிப்புகளை அவசியம் பின்பற்றியாக வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை பேஸ் பேக் பயன்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யவும். வாரத்திற்கு ஒரு முறை முகத்தை க்ளென்ஸ் செய்யும் நடைமுறையை பின்பற்றவும். இவற்றை பின்பற்றுவதால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

ஜங்க் உணவுகளைத் தவிர்க்காமல் எடுத்துக் கொள்வது

ஜங்க் உணவில் இருந்து எப்போதும் விலகி இருங்கள். இது சருமத்திற்கு மிகவும் கேடு செய்யும் உணவாகும். ஒரே இடத்தில் பல நாட்களாக இருப்பதால் ஏதாவது ஒன்றை கொறிக்கும் பழக்கம் இருப்பது வழக்கமானது என்றாலும் ஜங்க் உணவுகளைப் புறக்கணிப்பது நல்லது. ஜங்க் உணவுகள் உட்கொள்வதால் சருமத்தில் கட்டிகள் தோன்றும். சருமம் பொலிவிழந்து காணப்படும். போரடிக்கிறது என்று ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டிருக்காமல் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதால் பொலிவான சருமம் பெற முடியும்.

இரவில் தாமதமாக உறங்குவது

பொலிவான சருமம் பெற போதுமான தூக்கம் மிகவும் அவசியம். நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற வலைத்தளங்களில் உங்களுக்கு பிடித்த சீரியல்களை மற்றும் படங்களை இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டு பார்க்காதீர்கள். இரவில் சரியான நேரத்திற்கு உறங்கச் செல்லுங்கள். தினமும் இரவு 8-10 மணி நேரம் நன்றாக உறங்குங்கள். இதனால் உங்கள் சருமம் இளமையுடன் மற்றும் பொலிவுடன் விளங்கும்.

Related posts

உங்கள் மீது வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

சமையலில் பயன்படும் கொத்தமல்லி, கறிவேப்பிலைக் கொண்டு எப்படி அழகை மேம்படுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan

இயற்கை அழகு சாதனங்கள்

nathan

இயற்கை தரும் பேரழகு !

nathan

உடல் துர்நாற்றத்தை போக்க எளிய இயற்கை வழிகள்!

nathan

அக்குள் கருமையை போக்க வழிகள்

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

உங்க மேனி பள பளவென பாலிஷா இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதப் படிங்க

nathan

ஜில்லென்ற சருமம் வேண்டுமா? என்ன செய்யலாம்

nathan