2bberrry
அழகு குறிப்புகள்

என்றும் இளமையாக இருக்க சில சிறந்த உணவுகள்! நீங்கள் பின்பற்றுங்கள்…

வருடம் தவறாமல் நமக்கு வயதொன்று கூடத் தான் செய்கிறது. ஆனாலும் நாம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை “நினைத்தாலே இனிக்கும்” கமல் ஹாசன் முதல் “கத்தி” விஜய் வரை, இவர்களை போல என்றும் இளமையாக இருக்கத்தான் நாம் விரும்புகிறோம். ஆண்கள் மட்டுமா என்ன? பெண்கள் ஆண்களுக்கு மேல் இதில் மிக கவனமாக இருப்பவர்கள்.

வயது கூடினாலும் இளமையாக தோற்றமளிக்க, வெறும் மேக்-அப் மற்றும் மாயஜால வேலைகள் மட்டும் போதாது. நல்ல உடல் ஆரோக்கியமும் வேண்டும். முக்கியமாக உணவு பழக்கங்களின் மீது அக்கறையும், கவனமும் கொள்தல் அவசியமான ஒன்று. இதில், பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே அக்கறை இருக்க வேண்டும். ஏனெனில், இருபதுகளில் அழகிகளாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் நாற்பதை தொடுவதற்குள் கிழடுத்தட்டிப் போய்விடுவர். ஆண்கள் அப்படி கிடையாது, இருபதுகளில் சுமாராக இருப்பவர் நாற்பது வரையிலும் கூட அதே முகத் தோற்றத்துடன் தான் காட்சியளிப்பார்கள்

ஏன் நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஏனெனில் அதில் இருக்கும் நிறைய ஊட்டச்சத்துகள் நமது உடலுக்கும், தேகத்திற்கும் நிறைய நன்மைகள் விளைவிக்கிறது. சிலர் இளம் வயதிலேயே முதிர்வுற்றது போல் காட்சியளிப்பர், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும், இதில் இருந்து எல்லாம் விடுபட்டு என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களது மனதினுள் ஓடிக்கொண்டே இருகிறதா? பிரச்சனையே இல்லை, நல்ல உணவு பழக்கத்திற்கு மாறுங்கள், அந்த நல்ல உணவு பழக்கம் என்னவென்று நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பின்பற்றுங்கள்…

வால்நட்

வால்நட்டில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து, உங்களது உடம்பில் இருக்கும் தீயக் கொழுப்புச் சத்துகளை குறைக்கிறது. அதுமட்டுமின்றி, இது உங்களை இதய நோய்களில் இருந்துக் காத்திட உதவுகிறது. வயதடையும் போது நமக்கு பொதுவாகவே மூளையின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒமேகா 3 கொழுப்புச்சத்து இதில் இருந்து தீர்வுக்காண வெகுவாக உதவுகிறது. முதிர்வடையும் தன்மையில் இருந்து நம்மை பாதுகாக்க வால்நட் பெருமளவில் பயனளிக்கிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் இருக்கும் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் உடலில் ஏற்படும் முதிர்வடையும் தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடலில் இருக்கும் செல்களை நன்கு தூண்டி வேகமாக செயல்பட வைக்கிறது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி ப்ளூபெர்ரி கண்பார்வை அதிகரிக்கவும், மூட்டு வலிகள் குறையவும் உதவுகிறது.

கீரை

கீரை ஒரு சிறந்த உணவாகும். இதை தினசரி நமது உணவுப் பழக்கத்தில் உபயோகப் படுத்துவது சிறந்த ஆரோக்கியம் அளிக்க உதவும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ நமது சருமத்தைப் பல வகை நோய்களில் இருந்தும் சருமப் பிரச்சனைகளில் இருந்தும் காத்திட உதவுகிறது. முக்கியமாக சூரியக் கதிர்வீச்சில் இருந்து நமது சருமத்தைப் பிரத்தியேகமாகக் காத்திட பலனளிக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ பருகுவதன் மூலம் தேகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவை குறையும். இதில் இருக்கும் இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக் கிருமிகளிடம் இருந்து காக்கிறது. இது மட்டுமின்றி, நம்மை இதய நோய்களில் இருந்தும் காக்கிறது. எலும்புப் பகுதிகளுக்கு நல்ல வலுவினைத் தருகிறது.

சால்மன் (salmon)

சால்மனில் சிறந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது நமது முதிர்வடையும் தன்மையைக் குறைத்து இளமையாய் தோற்றமளிக்க உதவுகிறது. அபாயகரமான இதய நோய்களில் இருந்து காத்து நன்மை விளைவிக்கிறது சாலமனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வுணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி முதிர்வடையும் தன்மையை குறைப்பதில் நல்ல பயன் தருகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாய் உள்ளது. மற்றும் இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முதிர்வடையும் தன்மையை அதிகம் குறைக்கிறது. ப்ராக்கோலியில் இருக்கும் வைட்டமின் பி மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது மற்றும் வைட்டமின் கே1 நமது எலும்புகளுக்கு நல்ல உறுதியினை தருகிறது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் ஈ நமது சருமத்தை என்றும் இளமையாகப் பராமரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் முதிர்வடையும் தன்மையைக் குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ சருமப் பாதிப்பகளில் இருந்து நம்ம காக்கிறது.ஆலிவ் எண்ணெய் முகத்தில் ஏற்படும் சரும சுருக்கத்தை சரி செய்து மென்மேலும் சருமம் பிரகாசிக்க உதவுகிறது.

டார்க் சாக்லேட்

நம் அனைவருக்கும் பிடித்தமான உணவு டார்க் சாக்லேட். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் தங்கும் இறந்த செல்களைப் போக்க உதவுகிறது. இதன் மூலம் நமது சருமம் எப்போதும் பொலிவுடன் காணப்படும். மற்றும் டார்க் சாக்லேட்டில் இருக்கும் கொக்கோவின் பயன், நாம் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது.

பூண்டு

பூண்டில் அதிக ஆரோக்கியப் பயன்கள் உள்ளன. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சியை போக்கும் தன்மை நமது உடலுக்கும்,சருமத்திற்கும் பலவகைகளில் நிறைய நன்மை விளைவிக்கிறது. இது, இரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி, ஐயோடின், பொட்டசியம், மக்நீசியும் மற்றும் இரும்புச்சத்துகள் உடல் நலத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.

தக்காளி

நல்ல உடல் நலத்திற்கும் சரும நலத்திற்கும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது நல்லது. மற்றும் தக்காளி சரும பிரச்சனைகளான சரும வறட்சி, சுருக்கம், கரும்புள்ளி போன்றவற்றில் இருந்து காக்கிறது. மற்றும் இதய நோய்களில் இருந்தும், தீயக் கொலஸ்ட்ரால்களை குறைக்கவும் நல்ல பயன் தருகிறது.

Related posts

வீட்டிலேயே ஒரு சில எளிய வழிமுறைகளில் கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

அடேங்கப்பா! கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்…!

nathan

7 சரும பராமரிப்பு குறிப்புகள் சிறந்த பலனளிக்கும்

nathan

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

nathan

அழகு குறிப்பு

nathan

உங்கள் பற்களை அழகாக மாற்ற இந்த குறிப்புப்பை படியுங்கள்!…

sangika

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

முதுமையை முறியடிக்கும் முந்திரி,beauty tips in tmil

nathan

இந்த பிரச்சினையை தீர்க்க முடி வெட்டுதலும் ஒரு வகையில் உதவுகிறதாம்!…

sangika