24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
diabete
மருத்துவ குறிப்பு

ஜாக்கிரதை…! சர்க்கரை நோயாளிகளே காலில் புண் வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையெனில் அவை உடலில் பல பாதிப்புகளை உண்டாக்கிவிடும். அதில் ஒன்று கால்களில் உண்டாகும் புண்கள்.

தானாக புண்கள் கால்களில் உண்டாகாது என்றாலும் சிறு காயம் கால்களில் ஏற்பட்டாலும் அவை குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம்.

இவை கால்களில் மட்டும் அல்லாமல் வயிற்றில் கைகள் அல்லது தோல் மடிப்புகள் போன்ற பிற பகுதிகளிலும் உருவாகலாம். இந்த நேரத்தில் எப்படி மேலும் தீவிரமாகாமல் பார்த்துகொள்வது என்பதை பார்க்கலாம்.

​சர்க்கரை நோயாளிகளுக்கு புண்

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் தோலில் சிறு மாற்றத்தை கவனித்தாலும் மருத்துவரிடம் செல்வது நல்லது. இது காயத்தை ஆற்றுவதற்கான செயல்முறையாக இருக்கலாம். இது காயத்திலிருந்து ஆரோக்கியமற்ற திசுக்களை நீக்கி குணமடைய செய்கிறது. புண் பெரிதாக ஆகாமல் இருக்க மருத்துவர் அறிவுறுத்தும் விஷயங்கள் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.

​காயத்தை சுத்தம் செய்யுங்கள்

தினமும் புண்ணை சுத்தம் செய்யுங்கள். மருத்துவர் க்ளென்சரை பரிந்துரைக்காவிட்டால் சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்துங்கள். ஹைட்ரஜன் பெராக்ஸைடை பயன்படுத்த வேண்டாம். அதே போன்று காயம் இருக்கும் இடத்தின் மீது அதிகமாக தண்ணீர் பட வேண்டாம். இது தொற்றை அதிகரித்து காயத்தை பொறுமையாக குணமாக்கும்.​

காயத்தை திறந்து வைக்காதீர்கள்

காயத்தை கட்டு கட்டி வைக்கவும். காயத்தின் மீது மருந்திட்டு ஆடையால் மூடவும். காயம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை பொறுத்து மருத்துவர் அங்கு பேண்டேஜிங் அல்லது கட்டி விடலாம். காயத்தை மறைக்காமல் திறந்து வைக்கும் போது இது காயத்தின் தொற்றுநோயை அதிகரிக்கிறது. மேலும் காயம் குணமாவதை தடுக்க செய்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.​

கால்களில் புண் இருந்தால்

கால்களில் புண் இருந்தால் அதிக அசெளகரியத்தை உணர்வீர்கள். ஏனெனில் நடப்பது, நிற்பது போன்றவற்றை செய்வது அதிக அசெளகரியமாக்கும். கால்களை தாங்க ஊன்றுகோல், சிறப்பு காலணி, அல்லது ஊன்றி நீக்க ஏதேனும் ஒரு சாதனம் பயன்படுத்த வேண்டும்.

அதோடு கால்களில் அழுத்தம் மற்றும் எரிச்சலை குறைப்பது புண்கள் வேகமாக குணமடைய செய்கிறது.​

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வையுங்கள்

புண்களின் அபாயம் அதிகமாகாமல் இருக்க உடலில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வையுங்கள். புண்களின் அபாயத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் இறுக்கமான சர்க்கரை கட்டுப்பாடு உடலில் இருக்கும் புண்களை குணப்படுத்த உதவுகிறது.

புண்கள் நீண்ட நாட்கள் ஆனாலும் குணமாகவில்லை எனில் அவை எலும்புக்கு பரவும் தொற்றுநோயாக மாறலாம். அப்போது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மற்றும் ஹைபர்போலிக் ஆக்ஸிஜன் தெரபி ஆகியவை அடங்கும். புண் இருக்கும் இடத்தில் திசுக்கள் இறந்துவிட்டால் உடலின் அந்த பகுதியை துண்டிக்க வேண்டி இருக்கலாம்.

​புண்களை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

புண்களை தடுக்கவும், வாய்ப்பை குறைக்கவும் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வையுங்கள். சிறிய வெட்டுகள் மற்றும் புண்கள் ஏற்பட்டால் அவை தீவிரமாகாமல் தடுக்க சிறந்த வழி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதுதான்.

உங்கள் இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைப்பது சிக்கலாக இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகுங்கள் மருந்து மற்றும் வாழ்க்கை முறைகளில் சரி செய்ய அவர்கள் உங்களுடன் இணைந்து இரத்த சர்க்கரையை மோசமாவதை தடுக்கலாம். இரத்த சர்க்கரை சீராக இருந்தாலும் மருத்துவரை கவனித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

Related posts

உடல் நலம் காக்கும் வெற்றிலை மூலிகை

nathan

தாம்பத்தியத்தின் போது பெண்கள் சங்கடப்படும் விஷயங்கள்

nathan

பாட்டி வைத்தியத்தின் மூலம் நோய்களுக்கான தீர்வுகள்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது? அறிகுறிகள் என்ன?

nathan

தினமும் ஒரு பேரீச்சம்பழம்!

nathan

பெண்களே! ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படுகிறதா? இதைப் படியுங்கள்!

nathan

மூக்கடைப்பு பிரச்சனையா

nathan

தற்போதுள்ள பெண்கள் திருமணம் செய்துக் கொள்ள பயப்படுவது ஏன் தெரியுமா…?

nathan

கழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!!

nathan