27.5 C
Chennai
Sunday, Aug 17, 2025
beauty yoga
உடல் பயிற்சி

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ வேண்டுமா?

சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வுடன் காணப்படுவார்கள். அவர்களுக்கு சுறுசுறுப்படைய சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டு பயிற்சிகளை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு தேவையாக சக்தி கிடைக்கும். அவை என்ன வென்று பார்க்கலாம்.

* உங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி,
90 டிகிரி வளைந்து வரும் வரை கொண்டு வாருங்கள். பாதம் நேராக இருந்தாலும், சாய்வாக இருந்தாலும் பரவாயில்லை.
உங்கள் வயிற்று சுருக்கத்தின் மூலம் இடையை தரையில் வலு படுத்தி, உங்கள் காலை மேல் நோக்கி நேராக தூக்கவும். பிறகு காலை இறக்கி அதன் பழைய இடத்தில் வைக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பாதம் தரையில் படாமல் இருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவுகிறது.

* உங்கள் கைகளை உங்கள் தோள் பட்டையை சுற்றி 10 இன்ச் தூரத்தில் வைக்கவும். ஷூவில் உள்ள பாத நுனி, தரையில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் பின்பகுதியை நேராக வைத்துக் கொண்டு, இயல்பாக மூச்சு விட முயல வேண்டும்.
* இந்த பயிற்சி உங்கள் உடலின் பின்புறம் மற்றும் பக்கவாட்டினை கருத்தில் கொள்கிறது. மேலும் மேல் மற்றும் அடி வயிற்று பகுதியையும் இலக்காக கொண்டுள்ளது. மிருதுவான பரப்ப ளவில் படுத்து (யோகா விரிப்பு) சைக்கிளில் செய்வதை போல பெடலிங்கை காற்றில் செய்ய வேண்டும். மாறுதலுக்கு உங்கள் கணுக்காலை நோக்கி உங்கள் தோள் பட்டையை உயர்த்தவும். இரண்டு பக்கமும் சரிசமமாக இதை செய்ய வேண்டும். இரண்டு கால்களுக்கும் 20 முறை செய்வது நல்லது.

* உட்காரும் நிலையில் வைத்து டம்பெல்ஸ் அல்லது மருத்துவ பந்தை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முழங்காலை மடக்கி, பாதங்களை தரையில் வைக்க வேண்டும். அடி வயிற்றை இறுக்கிக் கொண்டு, சிறிது பின்னால் சாய வேண்டும்.
முழங்கையை மடக்கி, எடையை உங்களுக்கு உட்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின், பக்கத்திற்கு பக்கம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு சுழற்சியின் போதும், அந்தந்த நிலையில் சிறிது நேரம் நிலைத்து இருக்க வேண்டும்.
beauty yoga

Related posts

உடல் எடை குறைத்து, மெல்லிய உடல் பெற உதவும் சிறந்த காம்போ உணவுகள்!!

nathan

சிசு ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்

nathan

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

nathan

விரல்கள் செய்யும் விந்தை!

nathan

பெண்களுக்கு உடற்பயிற்சி பற்றிய 5 அறிவுரைகள்

nathan

15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்!

nathan

ஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்

nathan

மன அமைதிக்கு சிறந்தது சவாசனம்

nathan

கண்களைக் காக்கும் யோகா !

nathan