ரஷ்யாவில் 3 பேருடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் தீப்பிடித்து வெடித்துச் சிதறிய சம்பவம் காண்போரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவில் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் டிரான்ஸ்போர்ட் Il-112 ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டம் மாஸ்கோ நகருக்கு வெளியே நடைபெற்றது. இதையடுத்து, அந்த ஹெலிகாப்டரில் 3 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், நடுவானில் செல்லும்போது திடீரென தீப்பிடித்தது.
அப்போது, ஹெலிகாப்டரை தரையிறக்க பைலட் முற்பட்ட நிலையில், தீயானது மளமளவென பரவி ஹெலிகாப்டர் முழுவதும் பரவியது. இதனால், தீப்பிடித்த நிலையிலேயே சிறிது தொலைவு பயணித்த ஹெலிகாப்டர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது.
வானுயர கரும்புகைகள் எழுந்து, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைவில் இருந்து ஒருவர் படம்பிடித்துள்ளார்.
மேலும், மிகவும் கீழாக ஹெலிகாப்டர் செல்வதைப் பார்த்து படம்பிடிக்கும்போது, அந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது.
இதனால், ஹெலிகாப்டரில் இருந்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இது குறித்து ரஷ்ய ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்தது எதனால் என்பது குறித்த அனைத்து தகவல்களும் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
Самолет Ил-112В пилотировал экипаж в составе шеф-пилота ПАО «Ил», летчика-испытателя первого класса, Героя России Николая Куимова, летчика-испытателя первого класса Дмитрия Комарова, бортинженера-испытателя первого класса Николая Хлудеева. pic.twitter.com/osMgtQCbR8
— Пятый канал Новости (@5tv) August 17, 2021