25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
home treatment for damaged hair 2012 2
தலைமுடி சிகிச்சை

தல… குட்டும் பிரச்னைகள்… எட்டுத் தீர்வுகள்!

மிகவும் வறண்ட ஸ்கால்ப் மற்றும் கூந்தலால் அவதியுறுபவர்களுக்கு தீர்வுகள் சொல்கிறார், சென்னை ‘மியா பியூட்டி சலூன்’ உரிமையாளர் ஃபாத்திமா…

முட்டை
இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருக்களை எடுத்து, இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு, ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இதனை ‘பேக்’ ஆக தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து அலசவும். முட்டையில் உள்ள அதிக புரோட்டீன் சத்து, முடியை வலிமையாக்குவதுடன், வறட்சியிலிருந்து காக்கும்.

மயோனைஸ்
பிரெட் சாண்ட்விச் செய்ய உதவும் மயோனைஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை கப் எடுத்து, தலையில் நன்கு தடவி 15 நிமிடம் கழித்து அலசவும். இது வறண்ட கூந்தலை பளபளப்பாக்கும்.

இளம்தேங்காய் எண்ணெய்
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கக்கூடிய இளம்தேங்காயின் எண்ணெயை வாங்கி, தேவையான அளவு எடுத்து நன்கு சூடுபடுத்தி, வெதுவெதுப்பாகும் வரை ஆறவைத்து, தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து அலசவும். கேசத்துக்கு நல்ல கண்டிஷனர் இது.

டீ ட்ரீ ஆயில்
தலையில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் பூஞ்சை, அரிப்பு, செதில் செதிலாக உதிரும் டெட் ஸ்கின் போன்ற அனைத்து பிரச்னை களுக்கும் தீர்வளிக்கக்கூடியது, டீ ட்ரீ ஆயில் (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்). இதை தலையில் நன்கு தேய்த்து 20 நிமிடத்தில் அலச, முடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தடவவும். இதில் விட்டமின் `சி’ உள்ளதால் முடிக்கு ஈரப்பதம், பளபளப்பு அளிப்பதுடன் முடியை வலிமையாக்கும்.

அவகோடா
ஒரு அவகோடா பழத்தின் சதைப்பகுதியுடன் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலை மற்றும் முடியில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நேச்சுரல் ஆயில் நிறைந்த அவகோடா, வறண்ட தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், வறண்டு உடைந்த கூந்தலை மிருதுவாக்கி கண்ணாடி போன்ற பளபளப்பையும் அளிக்கக்கூடியது.

நல்லெண்ணெய்
நல்லெண்ணெயை வெதுவெதுப் பான சூட்டில் தலையில் தேய்த்து 10 நிமிடத்தில் அலசவும். இது வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் இன்ஸ்டன்ட் ரெமடி.

அலோ வேரா
ஒரு அலோ வேரா (சோற்றுக் கற்றாழை) கிளையின் உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும். இது கேசத்தை வறட்சியிலிருந்து காப்பதுடன், ஜிலீர் புத்துணர்வு அளிக்கும்.
home treatment for damaged hair 2012 2

Related posts

முடி கொட்டுதா? அப்ப வாழைப்பழத்தோடு இந்த பொருட்களை சேர்த்து தடவுங்க

nathan

கோடை கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் அருமையான 4 பாட்டி வைத்திய முறைகள்

nathan

கூந்தலை பாதுகாக்க எளிய வழிகள்

nathan

கூந்தல் உதிர்வை ஒரே மாதத்தில் தடுக்கும் வெங்காயம்

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

தலைமுடி கொட்டுவதற்கு ஐந்து முக்கிய காரணங்கள்!

nathan

கூந்தல் சிகிச்சை ஒரு எச்சரிக்கை

nathan

கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!

nathan