25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
d3d5a2ff
அசைவ வகைகள்

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

பொதுவாக முட்டை குழம்பு என்றால், மசாலா அரைத்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து இறங்குவார்கள்.

ஆனால் இன்று நாம் செய்யப்போகும் குழம்பு சற்று வித்தியாசமானது.

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி முட்டை – 6
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – தாளிக்க
அரைக்க தேங்காய் – அரை மூடி பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில், தேங்காயைத் துருவி பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாய் அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம். ப.மிளகாயை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள்.

அதன் பின் தக்காளியும் சிறிது உப்பும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை ஊற்றி சிறிது நீர் சேர்த்து உப்பை சரிபாருங்கள்.

குழம்பு பச்சை வாசனை போனவுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து, அவை மோதிக்கொள்ளாமல் இடைவெளி விட்டு குழம்பில் ஊற்றுங்கள். ஐந்து நிமிடத்தில் முட்டைகள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அனைத்துவிட்டால் முட்டைகுழம்பு தயார்.

Related posts

கேரளா சிக்கன் ப்ரை

nathan

சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல்

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan

மசாலா மீன் ப்ரை

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

nathan

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

சுவையான மட்டன் வடை

nathan

கோழி ரசம்

nathan