25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
100
சரும பராமரிப்பு

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்.—-அழகு குறிப்புகள்

தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.

இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

• உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

• எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.
100

Related posts

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

nathan

எண்ணெய் சருமத்திற்கான இயற்கை டோனர்கள் oil skin care tips in tamil

nathan

மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

nathan

அழகிற்காக டால்கம் பவுடரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் விளக்கெண்ணெய்!!!

nathan

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

nathan

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan

25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க

nathan

சருமத்தை பாதுகாக்கும் குளிர்கால குறிப்புகள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan